- Advertisement -
ஆசிய கோப்பை

பரபரப்பான போட்டியின் முடிவில் இலங்கை வீரரிடம்.. சூரியகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல்.. விவரம் இதோ

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 26ஆம் தேதி துபாயில் சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் 39, அக்சர் பட்டேல் 21* ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய இலங்கை கடுமையாக போராடியும் 20 ஓவரில் 202/5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. அதிகபட்சமாக நிசாங்கா சதமடித்து 107, குசால் பெரேரா 58, சனாக்கா 22* ரன்கள் எடுத்தனர். அதன் காரணமாக இலங்கை ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் ஏமாற்றுத்துடன் வெளியேறியது.

- Advertisement -

இலங்கை வீரரிடம்:

மறுபுறம் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன் இலங்கையிடம் மிகப்பெரிய பாடத்தை கற்றது. மொத்தத்தில் அப்போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் நடப்பு ஆசியக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே நேற்றைய இந்தியா – இலங்கை போட்டி ரசிகர்களுக்கு உச்சகட்ட த்ரில்லர் விருது படைத்தது.

அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியின் முடிவில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் இலங்கை வீரர் துணித் வெல்லலெகேவை தாமாக சென்று சந்தித்தார். கடந்த வாரம் வெல்லலெகே தந்தை இயற்கை எய்தினார். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெல்லலெகேவுக்கு எதிராக கடைசி ஓவரில் முகமது நபி 6 சிக்சர்கள் அடித்தார்.

- Advertisement -

சூரியகுமார் ஆறுதல்:

அந்த சமயத்தில் தான் அவருடைய தந்தை இயற்கையை எழுதியதாக செய்திகள் வெளியாகின. அதை அறிந்த முகமது நபி மனமடைந்து வெல்லலெகேவுக்கு ஆறுதல் சொன்னார். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் போட்டியை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வெல்லலெகே தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்று தம்முடைய கடமைகளை செய்து விட்டு மீண்டும் நாட்டுக்காக விளையாட துபாய் வந்தார்.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக நாங்க இவ்ளோ க்ளோஸா வந்து தோக்க அந்த 2 பேர் தான் காரணம் – சரித் அசலங்கா பேட்டி

அப்படி தந்தையின் பிரிவால் ஏற்பட்ட சோகத்தையும் மறந்து நாட்டுக்காக விளையாடும் அவரை பல ரசிகர்களும் பாராட்டினர். அந்த வரிசையில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் நேரில் சந்தித்து தோள் மேலே கை போட்டு வெல்லலெகேவுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடைய இந்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

- Advertisement -