இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்றின் இறுதி ஆட்டமானது நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது.
இந்திய அணியிடம் நாங்க தோற்க இதுவே காரணம் : சரித் அசலங்கா
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியும் சரியாக 20 ஓவர்களில் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.
இதன் காரணமாக இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று சூப்பர் ஓவரில் இந்திய அணி 3 ரன்கள் அடித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இலங்கை அணி சார்பாக இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசாங்கா 107 ரன்களையும், குசால் மெண்டிஸ் 58 ரன்களையும் குவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பந்துவீசும் வரை போட்டி எங்கள் வசம் தான் இருந்தது.
அவர்கள் மிடில் ஓவர்களை சிறப்பாக வீசியதாலயே எங்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை இருந்தாலும் இந்த போட்டியில் பதும் நிசாங்கா மிகச் சிறப்பான இன்னிங்ஸை விளையாடியிருந்தார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து நிறைய விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்.
இதையும் படிங்க : ரெக்கமெண்ட் பண்ண கம்பீரை தலைகுனிய வைத்த ராணா.. இந்தியாவின் வெற்றியை தாரை வார்க்க தெரிந்த பரிதாபம்
இந்த ஆசிய கோப்பை தொடரில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து நிச்சயம் இனி வரும் தொடர்களில் என் நல்ல பாசிட்டிவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.



