ரெக்கமெண்ட் பண்ண கம்பீரை தலைகுனிய வைத்த ராணா.. இந்தியாவின் வெற்றியை தாரை வார்க்க தெரிந்த பரிதாபம்

Harishit Rana
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்தது. செப்டம்பர் 26ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 61, திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் 39, அக்சர் பட்டேல் 21* ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய இலங்கையும் 20 ஓவரில் 202/5 ரன்கள் எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. அதிகபட்சமாக நிசாங்கா சதமடித்த 107, குசால் பெரேரா 58, சனாக்கா 22* ரன்கள் எடுத்தனர். இறுதியாக வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக இலங்கை வெறும் 2/2 ரன்களை மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ரெக்கமெண்ட் ராணா:

அடுத்ததாக ஹஸரங்கா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே 3 ரன்கள் அடித்த கேப்டன் சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். முன்னதாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால் இப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஹர்ஷித் ராணா தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா அணி 2024 கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார்.

அதை மட்டுமே வைத்துக்கொண்டு பயிற்சியாளராக வந்ததும் கௌதம் கம்பீர் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் டி20 கிரிக்கெட்டில் அவர் பெரியளவில் அசத்தவில்லை. அதே போல கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் சுமாராக பந்து வீசிய ராணாவை ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி பெஞ்சில் அமர வைக்க வைத்தனர்.

- Advertisement -

தலைகுனிந்த கம்பீர்:

அப்படி இருந்தும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அவருக்கு கௌதம் கம்பீர் வாய்ப்பளித்து விளையாட வைத்தார். அடுத்ததாக இந்தப் போட்டியில் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சுமாராக பந்து வீசிய ராணாவை இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கினார்கள். குறிப்பாக முதல் 3 ஓவரில் ராணா 44 ரன்கள் வாரி வழங்கியதைப் பார்த்த கௌதம் கம்பீர் தலை குனிந்து கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.

அதையும் தாண்டி கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது சூரியகுமார் அவரிடம் பந்தை வழங்கினார். அந்த வாய்ப்பில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த ராணா அடுத்த 5 பந்துகளில் 12 ரன்கள் கொடுத்தார். குறிப்பாக கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது டபுள் எடுத்த சனாக்கா அக்சர் பட்டேல் தவற விட்ட பந்தை சரியாக பார்க்காமல் டைவ் அடித்து விழுந்து விட்டார்.

இதையும் படிங்க: இதை சொல்லி தான் அர்ஷ்தீப்பிடம் சூப்பர் ஓவரை கொடுத்தேன்.. ஃபைனலுக்கு முன் எல்லாம் கிடைச்சுருச்சு.. சூரியகுமார் பேட்டி

ஒருவேளை அவர் டைவ் அடிக்காமல் பந்தை பார்த்து 3வது ரன் எடுத்திருந்தால் சூப்பர் ஓவருக்கு முன் அங்கேயே இந்தியா தோற்றிருக்கும் என்றே சொல்லலாம். அதனால் திறமைக்கு முன்னுரிமை கொடுக்காமல் பரிந்துரை அடிப்படையில் ராணா போன்ற வீரர்களை தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று கௌதம் கம்பீர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Advertisement