- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மஹேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனையை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரானது நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும், ராஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின.

எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ளிய சூரியகுமார் யாதவ் :

இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியானது மத்திய பிரதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக இடம்பெற்று விளையாடி இருந்த இந்திய அணியின் டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் 35 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 48 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியோடு சேர்த்து மாபெரும் சாதனை ஒன்றிணையும் அவரது வசம் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் உள்ளூர் டி20 கிரிக்கெட், ஐபிஎல், சர்வதேச டி20 என அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் அதிக சிக்சர்களை விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் இதுவரை இந்திய வீரராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக இதுவரை டி20 கிரிக்கெட்டில் 525 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர விராட் கோலி 416 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோக்க கூடாதுனா இதுநடந்தா மட்டும் தான் முடியும் – விவரம் இதோ

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த தோனி 338 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இந்நிலையில் அவரது இந்த எண்ணிக்கையை கடந்த சூரியகுமார் யாதவ் 339 சிக்சருடன் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -