ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடு வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியினை பெற்று தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.
தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டதால் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியிருந்தது.
அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் வேளையில் மூன்றாம் நாளில் மூன்றாவது செஷன் வரை நான்கு விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. இந்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதும் மழை பெய்ததால் தற்போது போட்டி தடைபட்டுள்ளது.
இன்னும் ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி 397 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் வேளையில் கைவசம் ஆறு விக்கெட் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது தோல்வியின் விளிம்பில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் : போட்டியின் மூன்றாம் நாளான இன்று மீதமுள்ள நேரமும் மழையால் தடைப்பட்டு ஆட்டம் கைவிடப்பட வேண்டும்.
இதையும் படிங்க : பும்ராவை சமாளிக்க திட்டம் இருந்தது.. ஆனா இவரை சமாளிக்க தான் என்கிட்ட பிளான் இல்ல – டிராவிஸ் ஹெட்
அதனை தொடர்ந்து நான்காவது நாளில் பெருமளவில் மழை பெய்தாலோ அல்லது நான்காம் நாள் முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் செய்தால் மட்டுமே இந்த போட்டியின் தோல்வியிலிருந்து தப்பித்து டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



