தொடர்ந்து மிரட்டும் சூரியகுமார் – தோனி, ரெய்னா, பாண்டியாவை முந்தி 2 புதிய வரலாற்று சாதனை

Suryakumar-Yadav
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரில் வென்று தன்னை உலகில் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்து சொந்த மண்ணில் தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது. அதற்கு தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் மிகச்சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ் ஆட்டம் மிகவும் அவசியமாகிறது.

Suryakumar Yadav

- Advertisement -

பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றி வரும் அவர் முதல் போட்டியில் இசான் கிசான், சுப்மன் கில், ராகுல் திரிப்பாதி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான போதும் தன்னுடைய ஸ்டைலில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். குறிப்பாக சுழலுக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருந்த ராஞ்சி மைதானத்தில் பாண்டியா உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது வேறு ஏதோ மைதானத்தில் பேட்டிங் செய்வது போல் அசத்திய அவர் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (32) ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடி அவுட்டானார்.

தொடரும் சாதனைகள்:
இருப்பினும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ரன்ரேட் எகிறிய அழுத்தத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் அவுட்டான அவர் கடந்த 2 வருடங்களில் விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரர்களை காட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று டி20 கிரிக்கெட்டில் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். குறிப்பாக மைதானத்தில் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விடும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

SUryakumar Yadav 112

முன்னதாக கடந்த வருடம் உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அவர் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மனாக உலக சாதனை படைத்து அசத்தலாக செயல்பட்டார். அதனால் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்று சாதனை படைத்த அவர் இப்போட்டியில் அடித்த 47 ரன்களையும் சேர்த்து தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை முந்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதை இதர வீரர்களை காட்டிலும் மிகவும் குறைந்த இன்னிங்ஸ்சில் அதிவேகமாக அடித்துள்ள அவர் விரைவில் டாப் இடத்தில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் வருங்காலங்களில் மிஞ்சுவார் என்று உறுதியாக சொல்லலாம். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 4008 (115 இன்னிங்ஸ்)
2. ரோஹித் சர்மா : 3853 (148 இன்னிங்ஸ்)
3. கேஎல் ராகுல் : 2265 (72 இன்னிங்ஸ்)
4. சிகர் தவான் : 1759 (68 இன்னிங்ஸ்)
5. சூரியகுமார் யாதவ் : 1625* (46 இன்னிங்ஸ்)
6. எம்எஸ் தோனி : 1617 (98 இன்னிங்ஸ்)
7. சுரேஷ் ரெய்னா : 1605 (78 இன்னிங்ஸ்)

Suryakumar Yadav Virat kohli

இதையும் படிங்க:IND vs NZ : 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற செய்ய வேண்டிய 3 தேவையான முக்கிய மாற்றங்கள் இதோ

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 94 சிக்சர்கள் அடித்துள்ள சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்டிக் பாண்டியா சாதனை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 61* இன்னிங்ஸ்
2. ஹர்திக் பாண்டியா : 101 இன்னிங்ஸ்
3. ரிஷப் பண்ட் : 116 இன்னிங்ஸ்
4. கேஎல் ராகுல் : 129 இன்னிங்ஸ்
5. எம்எஸ் தோனி : 132 இன்னிங்ஸ்

Advertisement