IND vs NZ : 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற செய்ய வேண்டிய 3 தேவையான முக்கிய மாற்றங்கள் இதோ

Hardik Pandya Prithvi Shaw
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்கியுள்ள இந்தியா இத்தொடரை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை என்பதை நிரூபித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜனவரி 29ஆம் தேதியன்று லக்னோவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு செய்ய வேண்டிய 3 அவசியமான நியாயமான மாற்றங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

1. அரஷ்தீப் சிங்: முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19 ஓவரில் 149/6 என்ற நிலையில் இருந்த போது கடைசி ஓவரை வீசிய அரஷ்தீப் சிங் மீண்டும் நோ-பால் போட்டு 27 ரன்கள் வாரி வழங்கியது இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

Arshdeep SIngh No Ball

ஏனெனில் கிரிக்கெட்டில் ரன்களை கொடுப்பது கூட பரவாயில்லை நோ-பால் போடுவது ஏற்றுக்கொள்ளவே முடியாது என்ற நிலைமையில் சமீபத்திய இலங்கை தொடரில் ஹாட்ரிக் நோ-பால் உட்பட 5 நோ-பால்களை வீசி மோசமான உலக சாதனை படைத்து வெற்றி தாரை வார்த்த அவர் கொஞ்சமும் முன்னேறாமல் மீண்டும் அதே சொதப்பலை செய்தார். 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் நல்ல பவுலர் என்றாலும் தற்சமயத்தில் பார்மின்றி தவிக்கிறார்.

- Advertisement -

எனவே உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்றால் மட்டுமே இந்த பிரச்சனையை சரி செய்யக்கூடிய அவருக்கு பதில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரை விளையாட வைக்கலாம். இதுவரை 23 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 25 விக்கெட்களை 7.20 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார்.

Shaw

2. இஷான் கிசான்: முதல் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்த போது வாஷிங்டன் சுந்தர் போன்ற ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினர். அதனால் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை தெரிந்து திறம்பட விளையாட வேண்டிய டாப் ஆர்டரில் மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய 2வது ஓவரில் இஷான் கிசான் க்ளீன் போல்ட்டானார்.

- Advertisement -

இத்தனைக்கும் தனது சொந்த ஊர் சூழ்நிலையில் சொதப்பிய அவர் கடைசி 12 டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் திண்டாடி வருகிறார். எனவே அதிகப்படியான வாய்ப்பு பெற்றும் சொதப்பும் அவருக்கு பதில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி உடல் எடையை குறைத்து 550 நாட்கள் கழித்து தேர்வாகியுள்ள பிரத்வி ஷா’க்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம். ஏனெனில் சமீபத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருக்கும் அவர் தற்போது வாய்ப்பின் அருமையும் உணர்ந்துள்ளதால் சிறப்பாக செயல்படுவார்.

Jitesh Sharma

3. சுப்மன் கில்: இஷான் கிசான் போலவே ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்தாலும் டி20 கிரிக்கெட்டில் பெரிய ரன்களை குவிக்கும் இவர் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். அதனாலேயே 2019இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் கடந்த நவம்பரில் தான் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: IND vs NZ : சூரியகுமார் யாதவின் வீக்னஸை சரியாக கணித்த மிட்சல் சான்ட்னர் – இப்படி போட்டா தடுமாறுவாரா?

ஆனால் அந்த அனுபவத்தை பயன்படுத்தி டி20 கிரிக்கெட்டில் அதிரடி துவக்கத்தை கொடுக்க தவறும் அவருக்கு பதிலாக 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அதிரடியாக செயல்பட்ட ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சேவாக் போன்ற முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்ற அவர் இஷான் கிசானுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக 6, 7 ஆகிய இடங்களில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமையும் பெற்றுள்ளார்.

Advertisement