IND vs NZ : சூரியகுமார் யாதவின் வீக்னஸை சரியாக கணித்த மிட்சல் சான்ட்னர் – இப்படி போட்டா தடுமாறுவாரா?

Suryakumar-Yadav-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் 30 வயதை கடந்த பின்னரே டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானாலும் அறிமுகமான ஒரே ஆண்டிலேயே ஐசிசி வழங்கிய சிறந்த டி20 பிளேயருக்கான விருதினை பெற்று அசத்தினார். அது மட்டுமின்றி கடந்த ஓராண்டாகவே இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் சூரியகுமார் யாதவ் இன்னும் சில ஆண்டு காலங்கள் இந்திய அணிக்காக முன்னணி வீரராக விளையாடுவார் என்பது உறுதி.

sky 2

- Advertisement -

அதேபோன்று உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராகவும் தனது அதிரடியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி அற்புதமாக ரன்களை குவித்து வரும் சூரியகுமார் யாதவ் இன்னும் ஏழு சிக்ஸர்களை அடித்தால் டி20 கிரிக்கெட்டில் வெகுவிரைவாக 100 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைக்க காத்திருக்கிறார்.

இப்படி அதிரடியில் வெளுத்து வாங்கி ரசிகர்கள் மத்தியில் புகழின் உச்சத்தில் இருக்கும் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழப்பது என்பது ஒரு பெரிய அசாதாரண விடயமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் வழக்கத்தை விட சற்று பொறுமையாக விளையாடியதுடன் ரன்களை குவிக்க தடுமாறியதும் அப்பட்டமாக தெரிந்தது.

sky 1

அதற்கு காரணம் மிட்சல் சான்ட்னர் வீசிய சில பந்துகள் தான் என்று கூறலாம். ஏனெனில் பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து விளையாடும் சூர்யகுமார் யாதவ் சாண்ட்னருக்கு எதிராக மிகவும் தற்காத்து விளையாடி வந்தார். அதுமட்டும் இன்றி பவர் பிளேவில் தொடர்ச்சியாக 5 பந்துகளை டாட் பாலாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதன் பிறகும் அவரது ஓவரில் ரன்களை குவிக்க தடுமாறினார்.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் : இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாண்ட்னர் சூர்யகுமார் யாதவின் பிளஸ் எது என்பதை கணித்து அதற்கு ஏற்றார் போல அவருக்கு பந்து வீசாமல் அவர் கஷ்டப்படும் ஏரியாவான ஆப் ஸ்டம்பிற்கு வெளியே நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டெம்பில் தொடர்ச்சியாக பந்தினை ஸ்விங் செய்து வீசிக்கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே அவரால் ரன்களை குவிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இவங்க 2 பேருக்கு தான் கேப்டனாக அதிக வாய்ப்பு – ஆகாஷ் சோப்ரா கருத்து

மேலும் சூரியகுமாருக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டெம்பில் பந்து வீசினால் நிச்சயம் அவரால் ரன்களை குவிக்க சற்று சிரமமாக இருக்கும் என்பதையும் அவர் வெளிகாட்டியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 40 ரன்களில் இரண்டு முறை ஆட்டம் ஆட்டமிழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement