ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இவங்க 2 பேருக்கு தான் கேப்டனாக அதிக வாய்ப்பு – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளில் ரோஹித்திற்கு தொடர்ச்சியாக ஓய்வு அளிக்கப்பட்டு வருவதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Rohit-Sharma

- Advertisement -

அதேவேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவே தொடர்ச்சியாக கேப்டனாகவும் இருந்து வருகிறார். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் ரோகித் சர்மாவே இந்திய அணியை வழியை நடத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேவேளையில் தற்போது தற்காலிக டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ஹார்டிக் பாண்டியா நிச்சயம் 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது உறுதியாகி உள்ளது.

Shubman Gill

அதேவேளையில் 35 வயதாகும் ரோஹித் சர்மா இந்த 50 ஓவர் உலககோப்பை தொடருடன் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றால் அடுத்ததாக யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்தே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. அதற்கு பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அடுத்த கேப்டன் தேர்வில் யார் போட்டியில் இருக்கிறார்கள்? என்பது குறித்த வெளிப்படையான கருத்தினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டனுக்கான போட்டியில் என்னை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : சச்சின், விராட் கோலி மாதிரி இவரும் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாரா மாறுவார் – சபா கரீம் நம்பிக்கை

மூன்று ஃபார்மேட்டிற்கும் ஒரே கேப்டன் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இனி வரப்போகும் இந்திய அணிக்கு தனித்தனியாக கேப்டன் இருப்பார்கள் என்பது உறுதி. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை ஹார்டிக் பாண்டியா கையில் மொத்தமாக கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதேவேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement