சச்சின், விராட் கோலி மாதிரி இவரும் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாரா மாறுவார் – சபா கரீம் நம்பிக்கை

Karim
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை நிகழ்த்தி ரசிகர்களின் மத்தியில் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்பட்டு வருகிறார். அவரை தொடர்ந்து தற்போது விராட் கோலி சச்சின் விட்ட அதே வழியில் பல சாதனைகளை முறியடித்து உலகின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் உலகெங்கிலும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

virat kohli 166

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் இருவரை தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் சூப்பர் ஸ்டார் வீரர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சபா கரீம் வெளிப்படையான தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை அடுத்து சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக கண்டிப்பாக மாறுவார். தற்போது அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது. விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக என்ன செய்தார்களோ நிச்சயம் அதனை சுப்மன் கில்லால் வெளிப்படுத்த முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

Shubman Gill 1

இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக அவர் மாறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவருடைய பேட்டிங் திறமையை கண்டு நான் வியக்கிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக சுப்மன் கில் திகழ்வார் என்றும் தனது வெளிப்படையான கருத்தினை அளித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தற்போது சரியான முறையில் பயிற்சி எடுத்து வரும் அவரை இன்னும் மேம்படுத்தும் அளவிற்கு தயார்படுத்த வேண்டும். அவருடைய பேட்டிங்கில் தற்போது நல்ல முதிர்ச்சி தெரிகிறது. எனவே அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இதனை அப்படியே தொடர்ந்தால் கட்டாயம் அவர் சூப்பர் ஸ்டார் வீரராக மாறுவார் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அவரமாதிரி ஒரு பிளேயரை எப்படி வெளிய உட்கார வைக்கலாம். சீனியர் வீரருக்கு – குவியும் ஆதரவு

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற சுப்மன் கில் முதல் ஆட்டத்தில் இரட்டை சதமும், மூன்றாவது ஆட்டத்தில் சதமும் விளாசி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement