அவரமாதிரி ஒரு பிளேயரை எப்படி வெளிய உட்கார வைக்கலாம். சீனியர் வீரருக்கு – குவியும் ஆதரவு

Fans
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் பின்னிலை அடைந்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

Washington Sundar.jpeg

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்திய அணியானது டி20 தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 176 ரன்களை குவிக்க 177 எண்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியால் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதன் காரணமாக 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இதில் இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி ஆட்டம் இழந்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சுப்மன் கில் 7 ரன்கள், இஷான் கிஷன் 4 ரன்கள், ராகுல் திரிபாதி டக் அவுட் என இந்திய அணியின் டாப் ஆர்டர் முழுவதுமாக சரிந்ததால் இந்திய அணியால் எந்த ஒரு இடத்திலும் வெற்றியை நோக்கி பயணிக்க முடியவில்லை. இறுதிவரை போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு உறுதுணையாக எந்த ஒரு வீரராலும் விளையாட முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்பட்டது குறித்து தற்போது முதல் முறையாக ரசிகர்கள் மத்தியில் குரல் எழுந்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு டி20 தொடர்களில் தொடர்ச்சியாக சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிராகரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs NZ : இந்தியா கம்பேக் கொடுக்குமா – 2வது டி20 நடைபெறும் லக்னோ மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதிலும் குறிப்பாக தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை டி20 அணியில் ஏன் சேர்க்காமல் இருக்கிறீர்கள்? அவர் நிச்சயம் இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி அதனை அப்படியே தொடர்ந்தால் நிச்சயம் இனிவரும் ஆண்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியிலிருந்து விடை பெறுவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement