IND vs NZ : இந்தியா கம்பேக் கொடுக்குமா – 2வது டி20 நடைபெறும் லக்னோ மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Lucknow-stadium
- Advertisement -

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி 21 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கியுள்ளது. தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

அதற்கு பவுலர்கள் டெத் ஓவரில் ஓரளவு சிறப்பாக பந்து வீச வேண்டியது அவசியமாகும் நிலையில் பேட்டிங் துறையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பவர் பிளே ஓவரில் அதிரடியாக ரன்களை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. மறுபுறம் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் அசத்திய நியூசிலாந்து இப்போட்டியிலும் வென்று 2 – 0 என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலே கைப்பற்றி ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்க உள்ளது. அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 29ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

லக்னோ மைதானம்:
கடந்த 2017இல் தோற்றுவிக்கப்பட்டு 50,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2018 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை நடைபெற்றுள்ள 5 டி20 போட்டிகளில் 2இல் விளையாடியுள்ள இந்தியா 2 போட்டியிலும் தோற்காமல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (155) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (111) பதிவு செய்த இந்திய வீரராக ரோஹித் சர்மா உள்ளார். இந்த மைதானத்தில் சதமடித்த ஒரே வீரராகவும் அவர் உள்ளார். இந்த மைதானத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் (4) உள்ளார்.

- Advertisement -

இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா – 199/2, இலங்கைக்கு எதிராக, 2022. வெற்றிகரமாக குறைந்தபட்ச இலக்கை கட்டுப்படுத்திய அணி : ஆப்கானிஸ்தான் – 147/7, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அது முதல் இன்னிங்ஸ் வரை மட்டுமே. ஏனெனில் இங்குள்ள பிட்ச்சில் இருக்கும் சீரான வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் எளிதாக அதிரடியாக பெரிய ரன்களை குவிக்கலாம். ஆனால் நேரம் செல்ல செல்ல மெதுவாக மாறக்கூடிய இந்த பிட்ச் 2வது இன்னிங்ஸில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக ஸ்பின்னர்களும் மித வேகப்பந்து வீச்சாளர்களும் 2வது இன்னிங்ஸ்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள். அதனாலேயே இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளின் அடிப்படையில் முதல் இன்னிங்ஸ்சில் 172 ரன்களாக இருக்கும் சராசரி ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 126 ரன்களாக குறைகிறது. சொல்லப்போனால் வரலாற்றில் இங்கு இதுவரை நடைபெற்ற 5 சர்வதேச டி20 போட்டிகளில் 5 முறையும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. சேசிங் செய்த அணிகள் இது வரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பெரிய ரன்களை குவித்தால் நிச்சயமாக இந்த மைதானத்தில் வெற்றி உறுதி என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: அதுல எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம கம்மி பண்ணுங்க, நோ-பால் வீச அதுவே காரணம் – அர்ஷ்தீப் சிங்கிற்கு கைப் அட்வைஸ்

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று லக்னோவை சுற்றிய பகுதிகளில் 30% மழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய மாநில மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் குறைவான வாய்ப்புடன் நல்ல மேகமூட்டம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement