அதுல எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம கம்மி பண்ணுங்க, நோ-பால் வீச அதுவே காரணம் – அர்ஷ்தீப் சிங்கிற்கு கைப் அட்வைஸ்

- Advertisement -

2023 அக்டோபரில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் விளையாடும் இத்தொடரில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19வது ஓவரில் 149/6 என்ற நிலையிலிருந்த போது போட்டி இந்தியாவின் கட்டுக்குள் இருந்தது.

Arshdeep SIngh No Ball

- Advertisement -

ஆனால் கடைசி ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் முதல் பந்திலேயே நோ-பால் போட்டு சிக்ஸர் வழங்கினார். அதனால் பதற்றமடைந்த அவர் மேற்கொண்டு 6, 6, 4, 0, 2, 2 என மொத்தம் 27 ரன்களை வாரி வழங்கியது இறுதியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் அறிமுகமாகி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த அவர் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

நோ-பால் காரணம்:
ஆனால் அதன்பின் ஓரிரு மாதங்கள் உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடாமல் இருந்த அவர் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஹாட்ரிக் நோ-பால் உட்பட மொத்தம் 5 நோ-பால்களை வீசி மோசமான உலக சாதனை படைத்த இந்தியாவின் வெற்றியையும் தாரை வார்த்தார். இந்தியாவுக்காக விளையாடாத நாட்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் லேசான காயத்துடன் நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கியதே ரிதத்தை இழந்து அவர் நோ-பால் வீசியதற்கு காரணம் என்று கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

Kaif

இந்நிலையில் இந்த நோ-பால் பிரச்சனைக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது காரணமல்ல என்று தெரிவிக்கும் முகமது கைஃப் பந்து வீசுவதற்காக நீண்ட தூரத்திலிருந்து ஓடி வருவதும் ஓவர் தி விக்கெட், ரவுண்ட் தி விக்கெட் திசைகளை அடிக்கடி மாற்றுவதே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அர்ஷிதீப் நீண்ட தூரம் ஓடி வருகிறார். அது அவருக்கு பந்து வீசும் போது காலை பதிக்கும் இடத்தில் பிரச்சனையை ஏற்படுகிறது. மேலும் நீண்ட தூரம் அவர் ஓடி வருவதால் தன்னுடைய எனர்ஜியையும் அவர் வீணடிக்கிறார். எனவே என்னைப் பொறுத்த வரை நீண்ட தூரம் ஓடி வருவது தான் அவர் காலை வெளியே வைத்து நோ-பால் போடுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது”

- Advertisement -

“அத்துடன் அவர் அடிக்கடி சைட் ஆங்கிளை மாற்றுகிறார். சில நேரங்களில் ரவுண்ட் தி விக்கெட் திசையிலும் சில நேரங்களில் ஓவர் தி விக்கெட் திசையிலும் அவர் மாற்றி மாற்றி பந்து வீசுகிறார். எனவே அவர் பந்து வீச்சின் அடிப்படையில் சில வேலைகளை செய்து பதற்றமடையாமல் விளையாட வேண்டும். ஏனெனில் நல்ல பவுலரான அவருக்கு அந்த நாள் சரியாக அமையவில்லை” என்று கூறினார். அதை ஒப்புக்கொண்ட மற்றொரு முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் அதே நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

sanjay-bangar

இதையும் படிங்க: நியூஸிலாந்துக்கு எதிரா இந்தியாவுக்கு பதில் அவர் தான் தனி ஒருவனா போராடுனாரு – தமிழக வீரரை மனதார பாராட்டிய பாண்டியா

“கைப் சொன்னது போல் அவர் தேவைக்கு அதிகமாக ஓடி வருகிறார். முதலில் ஒரு பவுலராக நீங்கள் அதை சரிப்படுத்த வேண்டும். ஒருவேளை உங்களிடம் வலுவான உடல் அமைப்பு இல்லையென்றால் பவரை உருவாக்குவதற்காக நீங்கள் நீண்ட தூரம் ஓடி வரலாம். எப்போதும் அர்ஷிதீப் ஒய்ட் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசுவார். ஆனால் இன்று பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் இடத்தில் வீசினார். எனவே இந்த சமயத்தில் அவர் தன்னுடைய பந்து வீச்சை பற்றி யோசித்து மாற்றங்களை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement