நியூஸிலாந்துக்கு எதிரா இந்தியாவுக்கு பதில் அவர் தான் தனி ஒருவனா போராடுனாரு – தமிழக வீரரை மனதார பாராட்டிய பாண்டியா

Hardik Pandya
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடி வரும் நிலையில் ஜனவரி 27ஆம் தேதியன்று ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 176/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பின் ஆலன் 35 (23), (23), டேவோன் கான்வே 52 (35), டார்ல் மிட்சேல் 59* (30) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

Washington Sundar.jpeg

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து 177 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில் 7, இஷான் கிசான் 4, ராகுல் திரிபாதி 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட சரிவில் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய சூரியகுமார் யாதவ் 47 (34) ரன்களும் ஹர்திக் பாண்டியா 21 (20) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

தனி ஒருவன் வஷி:
அந்த சமயத்தில் அதிரடி காட்ட வேண்டிய தீபக் ஹூடா 10 ரன்னில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (28) ரன்களை 178.57 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி கடைசி ஓவரில் போராடி ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவரில் 155/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் திண்டாடிய நிலையில் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் ஃபின் ஆலன் கொடுத்த கேட்ச்சை சூப்பர்மேன் போல தாவி பிடித்து அசத்தினார்.

Hardik-Pandya

அதே போல் பேட்டிங்கில் 50 ரன்கள் எடுத்த அவர் ஆல் ரவுண்டராக செயல்பட்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50 ரன்கள், 1 விக்கெட், 1 கேட்ச் எடுத்த முதல் இந்திய வீரராக சாதனையும் படைத்தார். அந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றிக்கு போராடியது என்று சொல்வதை விட வாஷிங்டன் சுந்தர் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார் என்று தான் சொல்ல வேண்டும் என கேப்டன் ஹர்திக் பாண்டியா தங்கள் மீதான தவறை ஒப்புக்கொண்டு சுந்தரை மனதார பாராட்டினார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. ” வாஷிங்டன் சுந்தர் பந்து வீசிய விதமும் பீல்டிங் செய்த விதமும் பேட்டிங் செய்த விதமும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றிக்கு போராடியது என்பதை விட வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு போராடினார் என்பது போல் இருந்தது. அவரும் அக்சர் பட்டேலும் இதே போல தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்யும்” என்று கூறினார். அப்படி பாண்டியாவின் பாராட்டை பெறும் அளவுக்கு அசத்திய வாஷிங்டன் சுந்தர் இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 12 இன்னிங்ஸில் வெறும் 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

Washington Sundar

இதையும் படிங்க: வீடியோ : போட்டியை கவனிக்காமல் வேடிக்கை பார்த்த அம்பயர் – அசத்திய தெ.ஆ, ஜேசன் ராய் மாஸ் கம்பேக் போராட்டம் வீண்

ஆனால் இந்த ஒரே போட்டியில் முதல் முறையாக அரை சதம் அடித்து 50 ரன்கள் குவித்த அவர் 2024 டி20 உலக கோப்பையை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தி வருகிறார். இதையடுத்து இத்தொடரை வெல்ல ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement