தோனியின் 16 வருட சாதனை நொறுக்கிய சூரியகுமார்.. கோலி போன்ற வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை

Suryakumar ms dhoni
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்த போது மழை வந்தது.

அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68* (39) ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை தாமதத்திற்கு பின் 15 ஓவரில் 152 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா ஹென்றிக்ஸ் 49 (27) கேப்டன் மார்க்ரம் 30 (17) ரன்கள் எடுத்த உதவியுடன் 13.5 ஓவர்லையே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

- Advertisement -

அதிவேக சூர்யகுமார்:
அதனால் முகேஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதன் காரணமாக 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.

மறுபுறம் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி கண்டும் எந்த போட்டியில் பந்து வீச்சில் மோசமாக விளையாடிய காரணத்தால் இந்தியா தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் 6/2 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தமக்கே உரித்தான பாணியில் தென்னாபிரிக்க பவுர்களை அனைத்து திசைகளிலும் அதிரடியாக எதிர்கொண்டு 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (36) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதன் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அரை சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சூரியகுமார் படைத்துள்ளார். இதற்கு முன் எம்.எஸ். தோனி, விராட் கோலி போன்ற எந்த இந்திய கேப்டன்களும் தென்னாபிரிக்க மண்ணில் டி20 கிரிக்கெட்டில் அரை சதமடித்ததில்லை.

இதையும் படிங்க: 152 ரன்ஸ்.. மழையால் புதிய டார்கெட்.. தெ.ஆ அசால்டாக சேஸ் செய்தது எப்படி.. இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன?

அத்துடன் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற தோனியின் 16 வருட சாதனையை உடைத்த சூரியகுமார் யாதவ் மற்றுமொரு புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் இதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோனி 45 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement