எப்படி போட்டாலும் 178 ஸ்ட்ரைக் ரேட்டில் அடி.. 7 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. தெ.ஆ மண்ணில் சூரியகுமார் இரட்டை சரித்திர சாதனை

Suryakumar 100
- Advertisement -

தென்னப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 3வது டி20 போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை சமன் செய்வதற்கு இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த சுப்மன் கில்லை 12 (6) ரன்களில் அவுட்டாக்கிய கேசவ் மகாராஜ் அடுத்ததாக வந்த திலக் வர்மாவை கோல்டன் அவுட்டாக்கினார். அதனால் 29/2 என இந்தியா தடுமாறினாலும் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

சூரியகுமார் சாதனை:
அந்த சூழ்நிலையில் வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் தென்னாப்பிரிக்கா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். அந்த வகையில் 3வது ஓவரில் சேர்ந்து 14 ஓவர்கள் வரை நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய போது ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் அரை சதமடித்து 60 (41) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைப்போலவே மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 6, 4, 6, 6 என அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு அரை சதம் கடந்து வேகமாக ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய போது எதிர்புறம் வந்த ரிங்கு சிங் 14 (10) ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனால் மறுபுறம் வரும் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 100 (56) ரன்களை 178.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதன் வாயிலாக சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். அத்துடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஒரு டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு மனிஷ் பாண்டே 79* ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: எப்படி போட்டாலும் 178 ஸ்ட்ரைக் ரேட்டில் அடி.. 7 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. தெ.ஆ மண்ணில் சூரியகுமார் இரட்டை சரித்திர சாதனை

குறிப்பாக இந்த முக்கியமான போட்டியில் முதல் 25 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் அடுத்த 31 பந்துகளில் 73 ரன்களை தென்னாபிரிக்கா பவுலர்கள் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கி இந்தியா பெரிய ரன்கள் எடுக்க உதவி தன்னை நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார். அவரது அதிரடியால் 20 ஓவர்களில் இந்தியா 201/7 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement