எல்லா மேட்ச்சும் ஒரே மாதிரியா இருக்கும்? தப்பு கணக்கு போட்டு விக்கெட்டை பரிசளித்த கில்

Gill Review
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதற்கு முன்பாக முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்வதற்கு டிசம்பர் 14ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு துவக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக 2 பவுண்டரியை பறக்க விட்டு நல்ல துவக்கத்தை பெற்றார். அதனால் கடந்த போட்டியில் டக் அவுட்டான வீழ்ச்சியிலிருந்து மீண்டு பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கேசவ் மகாராஜ் வீசிய 3வது ஓவரின் 2வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்படியேவா இருக்கும்:
அப்போது ரிவ்யூ எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் அதை செய்யாமல் தாம் கண்டிப்பாக அவுட்டாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டு 12 (6) ரன்களில் செவிலியன் நோக்கி ஏமாற்றத்துடன் சென்றார். அந்த நிலைமையில் அவருடைய அவுட் பற்றிய ரிப்ளையை பெரிய திரையில் ஒளிபரப்பு நிறுவனம் ரசிகர்களுக்காக ஒளிபரப்பி காட்டியது.

அதில் கில் அடிக்காமல் விட்ட பந்து அவரின் லெக் ஸ்டம்ப் மீது படாமலேயே சென்றது தெளிவாக தெரிந்தது. அதன் காரணமாக ஒருவேளை அவர் ரிவியூ எடுத்திருந்தால் அவுட் வாபஸ் பெறப்பட்டு மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றிருப்பார். அந்த வகையில் ரிவ்யூ எடுக்காததால் சுப்மன் கில் அவுட்டாகி சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

இருப்பினும் கடந்த போட்டியில் 0 ரன்களில் அவுட்டான போது அதை எதிர்த்து கில் ரிவியூ செய்தார். ஆனால் அது தெளிவாக அவுட் என்று தெரிந்ததால் இந்தியாவின் ஒரு ரிவ்யூவை வீணடித்த அவர் இப்போட்டியிலும் அதே போல வீணடித்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் அப்படி ரிவியூ எடுக்காமல் சென்றார் என்றே சொல்லலாம். அதனால் ஒவ்வொரு போட்டியும் ஒரே மாதிரி இருக்காது என்பதை புரிந்து கொண்டு வருங்காலத்திலாவது விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் என்று அவர் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கடைசி டி20 போட்டியின் டாஸிற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத முடிவை கையிலெடுத்த – கேப்டன் சூரியகுமார் யாதவ்

அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக திலக் வர்மா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இம்முறை அதிரடியாக விளையாடி வரும் நிலையில் அவருக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் கம்பெனி கொடுத்து வருவதால் சற்று முன் வரை இந்தியா 11 ஓவரில் 98/2 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி வருகிறது.

Advertisement