கடைசி டி20 போட்டியின் டாஸிற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத முடிவை கையிலெடுத்த – கேப்டன் சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது சற்று முன்னர் ஜோகன்னஸ்பர்க் நகரில் துவங்கியது. ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இதன் காரணமாக இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் போராடும் என்பதால் இந்த போட்ட அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி டி20 போட்டியின் டாஸ் சற்று முன்னர் போடப்பட்டு முடிந்தது. அந்த டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய இரண்டு மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டு ருதுராஜ் மற்றும் பிஷ்னாய் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் டாசுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அணியில் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே அணிதான் விளையாடுகிறது என்று யாருமே எதிர்பார்க்காத அதிரடியான முடிவை அறிவித்தார். அதோடு டாசுக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் விளையாடி அதிகளவில் ரன்களை குவிக்க நினைக்கிறோம். இந்த மைதானம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க : தங்கத்தை பறிகொடுத்துமா முன்னேறல.. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

எனவே நிச்சயம் இந்த போட்டியில் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும் என்று நினைக்கிறேன். நாங்கள் இந்த போட்டியில் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். கடந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை கற்றுள்ளதால் இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் அதே அணியுடனே நாங்கள் இந்த போட்டியிலே விளையாடுகிறோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement