காயமே இல்லாமல் சிகிக்சைக்கு சென்ற இஷான்.. சூரியகுமாருக்கு கையில் காயம்.. ரசிகர்கள் கவலை

Suryakumar Yadav 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. இதை தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் இந்தியா தங்களுடைய 5வது போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்வது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

குறிப்பாக சொந்த மண்ணில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் 20 வருடங்களாக ஐசிசி தொடரில் நியூசிலாந்திடம் சந்தித்து வரும் தோல்விக்கு இம்முறை இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் காயத்தை சந்தித்த ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா போட்டியில் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் கவலை:
இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக ஹர்திக் பாண்டியா செய்யக்கூடிய ஃபினிஷிங் வேலையை செய்வதற்காக சூரியகுமார் யாதவும் பவுலிங் வேலையை செய்வதற்காக முகமது ஷமியும் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தாக்கூர் கழற்றி விடப்படுவார் என்று நம்பப்படும் நிலையில் தேவைப்பட்டால் பாண்டியா இடத்தில் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இப்போட்டிக்காக தர்மசாலா மைதானத்தில் அக்டோபர் 21ஆம் தேதி இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சூரியகுமார் யாதவ் கையில் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறினார். குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்தை எறியும் பயிற்சியாளரான ரகு வீசிய பந்து கையில் பட்டதால் வலியால் துடித்த சூரியகுமார் பயிற்சியை பாதியுடன் நிறுத்தி விட்டு வெளியேறினார்.

- Advertisement -

அதே போல பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த இசான் கிசானும் தம்முடைய கழுத்தில் திடீரென தேனீ பூச்சி படித்ததால் பாதியிலேயே வெளியேறினார். அதன் காரணமாக அவர் காயத்தை சந்திக்காமலேயே அதற்கு சிகிச்சை எடுப்பதற்காக பயிற்சியில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே காயத்தால் வெளியேறிய பாண்டியாவுக்கு பதிலாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இவர்கள் இப்படி காயத்தை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நியாயமா இந்த விருது அவருக்கு தான் போயிருக்கணும். சதம் அடித்தும் பெரிய மனசை காட்டிய – ஹென்றிச் கிளாசன்

இருப்பினும் அதில் ஸ்கேன் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய காயத்தை சந்திக்காத சூரியகுமார் ஐஸ் ஒத்திரத்தை மட்டும் வைத்து முதலுதவிகளை எடுத்துக் கொண்டதால் இப்போட்டியில் தேவைப்பட்டால் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இஷான் கிசான் காயத்தைப் பற்றி முழுமையான தெரியவில்லை. இருப்பினும் கழுத்துப்பகுதியில் மட்டுமே தேனீ கடித்துள்ளதால் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு தேவைப்பட்டால் அவரும் களமிறங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்லலாம்.

Advertisement