நியாயமா இந்த விருது அவருக்கு தான் போயிருக்கணும். சதம் அடித்தும் பெரிய மனசை காட்டிய – ஹென்றிச் கிளாசன்

Klaasen
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 229 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் வடிவில் 7 விக்கெடுகளை இழந்து 399 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 22 ஓவர்களில் 172 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி சார்பாக அதிரடி ஆட்டக்காரர் கிளாஸன் 67 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்து அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய கிளாசன் கூறுகையில் : நான் விளையாடிய இன்னிங்ஸ்களில் இது ஒரு மிக முக்கியமான இன்னிங்ஸ்.

- Advertisement -

நான் இந்த போட்டியில் பந்தை நன்றாக அடித்ததாக உணர்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு எப்போதுமே நினைவில் இருக்கும். இந்த மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால் நிறைய சோர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு மைதானம் வெப்பமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு விக்கெடுகளை இழந்த போது இங்கிலாந்து அணி ஆட்டத்திற்குள் வந்தாலும் மார்கோ யான்சன் மிகச்சிறப்பாக விளையாடி எங்களது ரன் குவிப்பிற்கு உதவினார்/

இதையும் படிங்க : நல்லவேளை இங்கிலாந்து அதை பண்ணாங்க.. தோல்வியிலிருந்து மாஸ் கம்பேக் கொடுத்துட்டோம்.. தெ.ஆ கேப்டன் பேட்டி

என்னை பொறுத்தவரை அவருக்கு தான் இந்த ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும். அவர் எனக்கு அளித்த ஆதரவு எனை பெரிய அளவில் ரன்களை குவிக்க வைத்தது. முதலில் நாங்கள் பெரிய ரன் குவிப்பை வழங்கியதால் எங்களுக்கு போட்டியில் கூடுதல் சாதகம் கிடைத்தது. நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த பிறகு தற்போது சிறப்பாக மீண்டு வந்திருக்கிறோம். இன்றைய ஆட்டம் மொத்தத்திலேயே மிகச் சிறப்பாக அமைந்தது என கிளாஸன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement