நல்லவேளை இங்கிலாந்து அதை பண்ணாங்க.. தோல்வியிலிருந்து மாஸ் கம்பேக் கொடுத்துட்டோம்.. தெ.ஆ கேப்டன் பேட்டி

Aiden Markram 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 21ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 399/7 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 85, வேன் டெர் டுஷன் 60, கேப்டன் ஐடன் மார்க்ரம் 42, ஹென்றிச் க்ளாஸென் 109, மார்கோ யான்சென் 75* என பெரும்பாலான முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் எடுத்தனர். அந்தளவுக்கு சுமாராக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
அதை தொடர்ந்து 400 என்ற பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ 10, டேவிட் மாலன் 6, ஜோ ரூட் 2, பென் ஸ்டோக்ஸ் 5, ஹரி ப்ரூக் 17, கேப்டன் பட்லர் 15 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் மார்க் வுட் 43*, அட்கின்ஷன் 35 ரன்கள் எடுத்தும் 22 ஓவரிலேயே 170 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனால் 3வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்தின் செமி ஃபைனல் வாய்ப்பு கேள்விக்குறியான நிலையில் 4வது வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்களை சாய்த்தார். இந்நிலையில் கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் சந்தித்த படுதோல்வியிலிருந்து தங்களுடைய அணி கம்பேக் கொடுத்துள்ளதாக தற்காலிக தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்கம் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைக் கொடுத்து வெயிலில் தங்களுடைய பவுலர்கள் பந்து வீசுவதை தவிர்க்க உதவிய இங்கிலாந்தின் முடிவுக்கு நன்றி தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இங்கிலாந்து சேசிங் செய்வதை விரும்புவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ததை கச்சிதமாக எடுத்துக் கொண்டோம். அதிர்ஷ்டவசமாக எங்களுடைய பவுலர்கள் வெயிலில் பந்து வீசவில்லை. நீண்ட காலமாக அணியில் இருந்த ஹென்றிக்ஸ் என்று சிறப்பாக விளையாடினார்”

இதையும் படிங்க: நெனச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி நடந்த நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – தோல்விக்கு பிறகு ஜாஸ் பட்லர் வருத்தம்

“ஒவ்வொரு நாளும் பயிற்சிகளை எடுத்து அவருக்கு இன்று பரிசு கிடைத்துள்ளது. எங்களிடம் 5, 6 ஆகிய இடங்களில் கிளாசின் மற்றும் மில்லர் ஆகிய அதிரடியான வீரர்கள் இருக்கின்றனர். மார்கோ யான்சென் இது போன்ற உலக அரங்கில் க்ளாஸெனுடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து தன்னுடைய திறமையை காட்டி பெருமையடைந்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி எங்களுக்கு வலியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.

Advertisement