டிராவிட் எப்போவுமே என்கிட்ட இதைத்தான் சொல்வாரு. அதுவே என் அதிரடிக்கு காரணம் – சூரியகுமார் பேட்டி

Suryakumar-Yadav-and-Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த மூன்றாவது போட்டியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார்.

Suryakumar Yadav 2

- Advertisement -

இந்த போட்டியில் 51 பந்துகளை சந்தித்த அவர் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரி என 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அவரது அதிரடி காரணமாக இந்திய அணி 228 ரன்களை குவிக்க அடுத்த விளையாடிய இலங்கை அணியானது 137 ரன்களை மட்டுமே குவித்ததால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் தனது இந்த அதிரடியான ஆட்டம் குறித்தும், இந்திய அணி பெற்ற வெற்றி குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு போட்டிக்காகவும் நான் தயாராகும் போது களத்தில் எந்த சூழல் நிலவுகிறது அதை எவ்வாறு கையாண்டு விளையாட வேண்டும் என்பதை நினைத்துக் கொள்வேன். பயிற்சியின்போது நான் எதை முயற்சி செய்கிறேனோ அதனை போட்டியில் பயன்படுத்துவதே என்னுடைய வழக்கம்.

Suryakumar Yadav 1

அந்த வகையில் நான் நிறைய விடயங்களை பிராக்டிஸ் நேரங்களில் பயிற்சி செய்து பார்க்கிறேன். அதனாலேயே என்னால் போட்டிகளில் விளையாடும் போது அதிரடியாக விளையாட முடிகிறது. அதுமட்டும் இன்றி இந்த ராஜ்கோட் மைதானத்தில் பின்புறம் இருந்த மைதான எல்லை 50 முதல் 60 மீட்டர் வரை இருந்ததால் அதனை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் அந்த பகுதிகளை டார்கெட் செய்து மிகச் சிறப்பாக என்னால் விளையாட முடிந்தது. நாம் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் போது பவுலர்களும் தவறுகளை செய்வார்கள். அதனை சாதகமாக்கி ரன்களை குவிக்க நினைத்தேன். அதேபோன்று எனது அதிரடிக்கு பின்னர் டிராவிட் கூறும் சில விடயங்களும் இருக்கின்றன. அவர் எப்போதுமே என்னை மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக விளையாட கேட்டுக் கொள்வார்.

இதையும் படிங்க : வீடியோ : மீண்டும் கோபமடைந்து அம்பயரை மிரட்டி வம்பிழுத்த சாகிப் அல் ஹசன் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

அதேபோன்று நான் பேட்டிங் களமிறங்கும் போதெல்லாம் உன்னுடைய பெஸ்ட்டை வெளிப்படுத்த வேண்டும், அதனால் மகிழ்ச்சியுடன் சென்று சுதந்திரமாக விளையாடு என்று அனுப்பி வைப்பார். அதன் காரணமாகவும் என்னால் இப்படி அதிரடியாக விளையாட முடிகிறது என ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement