வீடியோ : மீண்டும் கோபமடைந்து அம்பயரை மிரட்டி வம்பிழுத்த சாகிப் அல் ஹசன் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் தொடரை போல இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசமும் சமீப காலங்களில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் எனப்படும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அதனுடைய 2023 சீசன் தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 7ஆம் தேதியன்று மிர்பூரில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் பார்சில் மற்றும் சைலட் ஆகிய அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த பார்சில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 194/7 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக வங்கதேசத்தின் ஜாம்பவானாக போற்றப்படும் நம்பிக்கை நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 67 (32) ரன்களை அதிரடியாக குவித்தார்.

அதை துரத்திய சைலட் அணிக்கு நஜ்முல் சாண்டோ 48 (40), டௌஹித் ஹிரிடோய் 55 (34), ஜாகிர் ஹசன் 43 (18), முஷ்பிகுர் ரஹீம் 23* (11), திசாரா பெரேரா 20* (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவித்து 19வது ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பார்சில் அணிக்கு அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரம் சாகிப் அல் ஹசன் 15வது ஓவரின் 4வது பந்தை ஒய்ட் கொடுக்கவில்லை என்பதற்காக நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

மிரட்டிய ஷாகிப்:
குறிப்பாக அந்த பந்தை பவுலர் ஸ்லோ பவுன்சராக வீசினார். அதை அடிக்க முயற்சித்த சாகிப் அல் ஹசன் சற்று அதிக உயரத்தில் சென்றதால் ஒயிட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பக்கவாட்டில் இருந்த நடுவர் அது “ஒன் பவுன்ஸ்” என்று அறிவித்ததை பார்த்து முதன்மை நடுவரும் ஒய்ட் கொடுக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த சாகிப் அல் ஹசன் “ஏய், ஹேய்,ஏய்” என மைதானமே அதிரும் அளவுக்கு வேகமாக கூச்சலிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் ஒய்ட் கிடைக்காததால் மேலும் கோபமடைந்த அவர் பக்கவாட்டில் இருந்த நடுவரிடம் சென்று தலைக்கு மேலே பந்து வந்தும் ஏன் ஒய்ட் கொடுக்கவில்லை என்று மிகவும் ஆக்ரோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு கோபமடையாத நடுவர் சிரித்த முகத்துடன் தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லி ஏன் ஒய்ட் வழங்கவில்லை என்பதை விளக்கினார். இருப்பினும் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி அவரை இதர வீரர்கள் சென்று பேட்டிங் செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

அதை பார்த்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்ட நிலையில் அந்த பந்து ஒய்ட் என்றாலும் அதற்காக நடுவரிடம் இப்படி வேகமாக சத்தம் போட்டு வாக்குவாதம் செய்த சாகிப் அல் ஹசன் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது என்று வர்ணனையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக வங்கதேசம் சார்பில் உலக அரங்கில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் அவர் இது போன்ற சிறிய விஷயத்துக்காக கோபத்தை இழந்து நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று தெரிந்தும் நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது எந்த வகையிலும் இளம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் செயல் அல்ல என்றும் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு என்ன இது புதுசா? என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். ஏனெனில் கடந்த வருடம் வங்கதேசத்தில் நடைபெற்ற தாக்கா பிரீமியர் லீக் தொடரில் இதே போன்ற ஒரு தருணத்தில் நடுவர் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக சாகிப் அல் ஹசன் ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்தார்.

இதையும் படிங்க: மீண்டும் அதேமாதிரி அடிக்க சொல்லுங்க பாக்கலாம் – வரலாற்று சம்பவம் செய்த கிங் கோலிக்கு பாக் வீரர் சவால்

அதோடு நிற்காமல் நடுவரை அடிக்காத குறையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அவர் இறுதியில் ஸ்டம்ப்புகளை பிடுங்கி எறிந்தது உலக அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த செயலுக்காக பின்னர் மனம் வருந்திய அவர் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அதிலிருந்து முழுமையாக திருந்தாத அவர் தற்போது அதே போலவே மீண்டும் நடுவரை மிரட்டும் வகையில் நடந்து கொண்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement