மீண்டும் அதேமாதிரி அடிக்க சொல்லுங்க பாக்கலாம் – வரலாற்று சம்பவம் செய்த கிங் கோலிக்கு பாக் வீரர் சவால்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வரிசையில் 2023இல் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பைக்கு பாதுகாப்பு காரணங்களால் செல்ல முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கு எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே 2023இல் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை பங்கேற்க உங்கள் நாட்டுக்கு நாங்களும் வரமாட்டோம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

இதனால் அனல் பறந்து வரும் இந்த விவாதத்திற்கு மத்தியில் கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த 2022 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை லீக் போட்டியில் மோதின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அப்போட்டியில் வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி காலத்திற்கும் மறக்க முடியாத சரித்திர வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 160 ரன்களை துரத்தும் போது ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே கைவிட்டதால் 31/4 என திண்டாடிய இந்தியாவை ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்து காப்பாற்றிய விராட் கோலி 82* (53) ரன்கள் குவித்து அபார வெற்றி பெற வைத்தார்.

மீண்டும் முடியுமா:
குறிப்பாக 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பாகிஸ்தானின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் வீசிய 19ஆவது ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்த விராட் கோலி அனைவரையும் ஆசிரியப்படுத்தினார். அதிலும் குறிப்பாக பவுன்ஸாகி வந்த பந்தை பின்னங்காலில் நின்று அசால்டாக நேராக அவர் அடித்த சிக்ஸர் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்போது வரை அதை எப்படி அடித்தார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என இயன் சேப்பல், மார்க் டெய்லர் போன்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் வியந்து வரும் நிலையில் “அந்த சிக்ஸர் தான் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த சிங்கிள் ஷாட்” என ஐசிசி அறிவித்து கௌரவப்படுத்தியது.

MS Dhoni Virat Kohli

அதே போல் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை விட விராட் கோலி அவ்வாறு அடித்ததில் தமக்கு எந்த ஆச்சரியமில்லை என்று ஹாரீஸ் ரவூப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த சமயத்தில் நல்ல டைமிங் கொடுத்து அடித்ததால் அந்த சிக்சர் பறந்ததாக தெரிவிக்கும் ஹாரிஸ் ரவூப் விராட் கோலியால் அதே சிக்ஸரை மீண்டும் தமது பந்தில் அடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதாவது ஆங்கிலத்தில் ப்ளூக் என்று வல்லுனர்கள் சொல்வது போல நல்ல நேரம் மற்றும் அதிர்ஷ்டத்துடன் அந்த ஷாட்டை விராட் கோலி அடித்ததாக தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் 2023இல் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போது அவரால் அதே போல் அடிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசியது பின்வருமாறு. “ஆம் கண்டிப்பாக அந்த பந்து சிக்ஸர் சென்ற போது எனக்கு மிகவும் வலித்தது. அதைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை ஆனால் அது தன்னிச்சையாக என்னை மிகவும் ஏமாற்றமடைய வைத்தது. அப்போது நான் ஏதோ தவறாக நடந்ததாக நினைத்தேன். மேலும் கிரிக்கெட்டை பற்றி தெரிந்த அனைவருமே விராட் கோலி எந்த மாதிரியான வீரர் என்பதை தெரிந்திருப்பார்கள். தற்போது அவர் அந்த ஷாட்டை விளையாடியுள்ளார்”

rauf

இதையும் படிங்க: வீடியோ : பயமின்றி பேட்டிங் செய்த ராகுல் திரிபாதி – பாண்டியா உட்பட மொத்த ரசிகர்களும் பாராட்டு

“ஆனால் அது போன்ற ஷாட்கள் மிகவும் அரிதானதாகும். அதனாலேயே அதை நீங்கள் மீண்டும் மீண்டும் அடிக்க முடியாது. அந்த சமயத்தில் அவர் சிறப்பான கச்சிதமான டைமிங் கொடுத்து அடித்ததால் தான் அந்த பந்து சிக்ஸர் பறந்தது” என்று கூறினார். அதாவது அதே டைமிங் கொடுத்து மீண்டும் அடிப்பது கடினம் என்பதால் அதே போல் விராட் கோலி விளையாட முடியாது என்று ஹாரீஸ் ரவூப் சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Advertisement