டாஸ் அதிர்ஷ்டம் கிடைச்சும் தப்பு பண்ணிட்டீங்களே – ராஜஸ்தானின் தவறை சுட்டி காட்டும் சச்சின் டெண்டுல்கர்

RRvsGT-1
- Advertisement -

மே 29-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஹமதாபாத் நகரில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி 20 ஓவர்களில் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) சாம்சன் சிம்ரோன் ஹெட்மையர் 11 (12) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 (35) ரன்கள் எடுத்தார்.

Gujarat Titans GT Champ

- Advertisement -

அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சாஹா 5 (7) மேத்யூ வேட் 8 (10) என சொற்ப ரன்களில் அவுட்டானாலும் பேட்டிங்கிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா 34 (30) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் சுப்மன் கில் 45* (43) ரன்களும் டேவிட் மில்லர் 32* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுக்க 18.1 ஓவரில் 133/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் அதிர்ஷ்டம்:
அதனால் ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் வென்று சரித்திரம் படைத்தது. மறுபுறம் 2008க்குப் பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் பேட்டிங்கில் சொதப்பியதால் 2-வது கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

GTvsRR

1. இத்தனைக்கும் இந்த வருடம் முழுவதும் குவாலிபயர் 1 நாக் – அவுட் போட்டி உட்பட 15 போட்டிகளில் 13 முறை டாஸ் தோற்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு இறுதிப் போட்டியில் டாஸ் எனும் அதிர்ஷ்டம் ஆரம்பத்திலேயே கைகொடுத்தது.

- Advertisement -

2. இந்த வருடம் பெரும்பாலான போட்டிகளில் சேசிங் செய்யும் அணிகள் வெற்றி பெற்றது என்பதுடன் டேவிட் மில்லர், ராகுல் திவாடியா போன்ற வீரர்களை கொண்ட குஜராத் சேசிங் செய்வதில் கில்லாடியாகும்.

RRvsGT

3. அதைவிட பெங்களூருவுக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசி வெற்றிகரமாக சேஸிங் செய்து ராஜஸ்தான் வென்றது.

- Advertisement -

4. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஃபைனலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த அந்த அணி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

GT vs RR Shubman Gill

5. இருப்பினும் இதற்கு முன் அதிகபட்சமாக 11 இறுதிப் போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் முதலில் பேட்டிங் செய்து 7 முறை வென்றுள்ளார்கள். மேலும் பைனல் போன்ற மாபெரும் அழுத்தம் நிறைந்த போட்டியில் ஒருசில விக்கெட்டுகளை இழந்துவிட்டால் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் சேசிங் செய்வது கடினமான ஒன்றாகும்.

- Advertisement -

6. அந்த வகையில் ராஜஸ்தான் எடுத்த முடிவு சரியானது என்றாலும் வெற்றிக்கு முதலில் பேட்டிங் செய்து குறைந்தது 160 – 180 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறி அந்த அணி வெற்றியை கோட்டை விட்டது.

Sachin

மிஸ் பண்ணட்டீங்க:
இந்நிலையில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் சேசிங் வெற்றியைத் தவற விட்டுவிட்டதாக ராஜஸ்தானின் தவறை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் செய்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முந்தைய (பெங்களூருவுக்கு எதிரான) போட்டியில் டாஸ் வென்று பந்துவீசிய அவர்களின் பவுலர்களுக்கு கடைசி நேரத்தில் இதே மைதானம் சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் எதற்காக அதுவும் பைனலில் முதலில் பேட்டிங் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்தப் பெரிய போட்டியில் முதலில் அவர்கள் பேட்டிங் செய்ய விரும்பியிருக்கலாம்”

“ஆனால் இந்தத் தொடரில் அந்த போட்டிக்கு முன் குஜராத் இந்த மைதானத்தில் விளையாடியதில்லை. மறுபுறம் ஏற்கனவே முந்தைய போட்டியில் விளையாடிய ராஜஸ்தானுக்கு இந்த மைதானம் எப்படி இருக்கும் என்ற ஐடியாவும் தெரியும். எனவே என்னை பொருத்தவரை அவர்கள் முதலில் பந்து வீசியிருந்தால் குஜராத்துக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒருவேளை பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் சிறப்பாக பேட்டிங் செய்ததால் முதலில் பேட்டிங் செய்து நல்ல இலக்கை நிர்ணயிக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : உலககோப்பை ஜெயிச்ச மாதிரி – வெற்றியை ஊர்வலமாக கொண்டாடிய குஜராத், முக்கிய இடத்திலிருந்து பாராட்டு

அவர் கூறுவது போல பைனலுக்கு முன்புவரை போட்டி நடைபெற்ற அஹமதாபாத் மைதானத்தில் இந்த வருடம் குஜராத் விளையாடியதில்லை. மறுபுறம் பைனலுக்கு முன்பாக பெங்களூருவுக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் முதலில் பந்துவீசி அதை ஜோஸ் பட்லர் அற்புதமாக சேசிங் செய்த நிலையில் சச்சின் கூறுவதுபோல இறுதிப் போட்டியில் அதே யுக்தியை கையாண்டிருந்தால் ஒருவேளை வெற்றி கிடைத்திருக்கலாம்.

Advertisement