கடந்த 4 ஆண்டுகளாக ஒரே அணிக்கு சாதகமான மே 18-ஆம் தேதி.. வெளியான அசத்தல் புள்ளி விவரம்

RCB-vs-CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்த ஆட்டங்களின் அடிப்படையில் கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அவர்களுக்கு அடுத்து மீதம் உள்ள மூன்று இடங்களுக்கான போட்டி தற்போது கடுமையாக நிலவுகிறது. ஏற்கனவே இந்த தொடரில் மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் வெளியேறி விட்டன.

மீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஆறு அணிகள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் ஒரு கால் வைத்துள்ள நிலையில் கடைசி இடத்திற்கான போட்டியில் தற்போது சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடுமையாக இருந்து வருகிறது.

- Advertisement -

டெல்லி மற்றும் லக்னோ அணிகளும் பிளே ஆப் சுற்றுக்காக முன்னேற வாய்ப்பு இருந்தாலும் அவர்களின் நெட் ரன்ரேட் குறைவாக இருப்பதால் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதோடு மே 18-ஆம் தேதி நடைபெற இருக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. சென்னை அணி வெற்றி பெற்றால் எளிதாக தகுதியடையும்.

- Advertisement -

அதேவேளையில் பெங்களூரு அணியானது சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் உள்ள வேளையில் சேசிங் செய்தால் மட்டுமே தகுதி பெறும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் மே 18-ஆம் தேதி நடைபெறப்போகும் இந்த போட்டி யாருக்கு சாதகம்? என்பது குறித்த ஒரு புள்ளிவிவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.

இதையும் படிங்க : 208 ரன்ஸ்.. லக்னோவை வெளுத்த ஸ்டப்ஸ்.. டிகே’வை முந்தி மிரட்டல் சாதனை.. ஐபிஎல் 2024 சீசன் அதிரடி சாதனை

அந்த வகையில் இதுவரை நான்கு ஆண்டுகளாக மே 18-ஆம் தேதி நடைபெற்ற அனைத்து போட்டியிலும் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றுள்ளதாலும் அந்த நாட்களில் நடைபெறும் போட்டிகளில் விராட் கோலி இதுவரை இரண்டு சதம் அடித்துள்ளதாலும் எதிர்வரும் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு அதிக சாதகம் இருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement