208 ரன்ஸ்.. லக்னோவை வெளுத்த ஸ்டப்ஸ்.. டிகே’வை முந்தி மிரட்டல் சாதனை.. ஐபிஎல் 2024 சீசன் அதிரடி சாதனை

DC vs LSG
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 64வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லி மற்றும் லக்னோ ஆகிய 2 அணிகளுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆரம்பத்திலேயே அர்சத் கான் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த சாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரல் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் சாய் ஹோப் 38 (27) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய ஸ்டப்ஸ்:
அந்த நிலையில் வந்த கேப்டன் ரிசப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்தார். அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அபிஷேக் போரேல் 21 பந்துகளில் அரை சதமடித்து 58 (33) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே ரிஷப் பண்ட் 38 (27) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் லக்னோ பவுலர்களை டெத் ஓவர்களில் வெளுத்து வாங்கினார்.

அதே வேகத்தில் சரவெடியாக விளையாடிய அவர் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 22 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு 57* (25) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். தென்னாபிரிக்காவை சேர்ந்த 23 வயதாகும் அவர் 50 லட்சத்திற்கு டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் இந்த வருடம் 16 – 20 வரையிலான ஓவர்களில் மட்டும் அவர் 252 ரன்களை 262.5 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக 2024 ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தினேஷ் கார்த்திக் சாதனையை அவர் உடைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணிக்காக தினேஷ் கார்த்திக் 226 ரன்களை 226 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து 2வது இடத்தில் உள்ளார். இறுதியில் அவருடன் அக்சர் பட்டேல் 14* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் டெல்லி 208/4 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை தொடர்ந்து பாண்டியாவின் மீது அதிருப்தியில் உள்ளாரா சூரியகுமார் யாதவ்? – என்ன நடந்தது

இதையும் சேர்த்து இந்த வருடம் அனைத்து ஐபிஎல் அணிகளும் மொத்தம் 37 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளன. இதன் வாயிலாக வரலாற்றில் அதிக முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் என்ற சாதனையை 2024 சீசன் சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 சீசனிலும் 37 முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்டது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement