- Advertisement -
ஐ.பி.எல்

எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க – பாசத்தில் பொங்கிய சின்னத்தல ரெய்னா, கலங்கிய ரசிகர்கள்

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் முறையாக மோதின. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ செய்த குஜராத் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அற்புதமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 210/7 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பவர்பிளே ஓவர்களில் பந்தாடிய அனுபவ வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.

சென்னை 2-வது தோல்வி:
அதை தொடர்ந்து 211 என்ற இலக்கை துரத்திய லக்னோ அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களுக்கு மேல் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் 45 பந்துகளில் 61 ரன்களும் கேப்டன் கேஎல் ராகுல் 26 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் எவின் லெவிஸ் வெறும் 23 பந்துகளில் 55* ரன்களும் இளம் வீரர் ஆயுஷ் படோனி 9 பந்துகளில் 19* ரன்களும் விளாசி சிறப்பான பினிஷிங் கொடுத்தனர். இதனால் 19.3 ஓவர்களில் 211/4 ரன்களை எடுத்த லக்னோ வரலாற்றில் தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

வர்ணனையில் சின்னத்தல ரெய்னா:
முன்னதாக கடந்த பல வருடங்களாக தொடர்ந்து சென்னை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சுரேஷ் ரெய்னா சமீப காலங்களாக பார்ம் இல்லாத காரணத்தால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை உட்பட யாரும் வாங்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து மிஸ்டர் ஐபிஎல் என பெயர் பெற்ற அவரை தமிழக ரசிகர்கள் சின்னத்தல என தலையில் வைத்துக் கொண்டாடி வந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிலைமையை பார்த்து சென்னை ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்திற்கு உள்ளானார்கள். இருப்பினும் நிதர்சனத்தை புரிந்து கொண்ட அவர் அதற்காக பின்வாங்காமல் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்து தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

- Advertisement -

அந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதிய இந்த போட்டியை தமிழ்நாட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் தமிழ் சேனல் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்போது சுப்ரமணியம் பத்ரிநாத், ஆர்கே போன்ற வழக்கமாக தமிழில் வர்ணனை செய்பவர்கள் இந்த போட்டிக்கும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தமிழக ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் தமிழ் வர்ணனையாளர்கள் செய்யும் அறைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சுரேஷ் ரெய்னா தமிழக பாரம்பரிய முறைப்படி கைகூப்பிய வணக்கங்களுடன் தமிழ் வர்ணனையில் இணைந்தார். சொல்லப்போனால் ஹிந்தியில் வர்ணனை செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் சென்னை மற்றும் தமிழக ரசிகர்கள் மீது இருக்கும் பாசத்தின் காரணமாக தமிழில் வர்ணனை செய்வதற்கு வந்தது சென்னை மீது அவர் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளார் என்பதை காட்டியது.

பெரிய விசில் அடிங்க:
அந்த வேளையில் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்ற சுப்ரமணியம் பத்ரிநாத் மற்றும் ஆர்கே ஆகியோர் தங்களின் நடுவில் அமரவைத்து வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தனது வர்ணனையை தொடக்கிய சுரேஷ் ரெய்னா முதலில் “வணக்கம் மக்களே” என தமிழக மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு அதன்பின் ஆங்கிலத்தில் பேசினார். அந்த சமயத்தில் சென்னை அணிக்காக வரலாற்றில் அவர் விளையாடிய மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களையும் அதன் காரணமாக சென்னை பதிவு செய்த வெற்றிகள் அடங்கிய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன.

- Advertisement -

குறிப்பாக சென்னை முதல் முறையாக கோப்பையை வென்ற கடந்த 2010 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகன் விருது வென்ற தருணங்கள் 2010, 2011 ஆகிய வருடங்களில் அடுத்தடுத்து சென்னை கோப்பை வென்ற தருணங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை பார்த்த சுரேஷ் ரெய்னா மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அந்த சமயத்தில் சென்னைக்காக தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் உடன் இணைந்து விளையாடியதையும் அவர் நினைவு கூர்ந்தார். அப்போது ஒரு ரசிகர் “சுரேஷ் ரெய்னா, எங்க தல தோனிக்கு விசில் அடிக்க முடியுமா” என சமூக வலைதளம் வாயிலாக கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதை பார்த்த சுரேஷ் ரெய்னா ஒரு வினாடி கூட தாமதிக்காமல் உடனே “எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க” எனப்பேசியதுடன் சூப்பராக விசிலும் அடித்து சென்னை மீது இருக்கும் பாசத்தில் பொங்கினார். அதைப் பார்த்த பல சென்னை அணியின் ரசிகர்கள் உணர்ச்சியில் கண் கலங்கினார்கள் என்றே கூறலாம்.

இதையும் படிங்க : தோனி டீமை மண்ணைக்கவ்வ வைத்த அந்த வெறி! வரைலாகும் போட்டோ – கடைசியில் கம்பீர் வைத்த ட்விஸ்ட்

இந்த போட்டியில் கையிலிருந்த நல்ல வெற்றியை மோசமான பந்து வீச்சால் கோட்டைவிட்ட சென்னை ரசிகர்களுக்கு சின்னத்தல சுரேஷ் ரெய்னா தமிழில் பேசியது மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

- Advertisement -
Published by