தோனி டீமை மண்ணைக்கவ்வ வைத்த அந்த வெறி! வரைலாகும் போட்டோ – கடைசியில் கம்பீர் வைத்த ட்விஸ்ட்

Gambhir Pumped Up
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31-ஆம் தேதி நேற்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்த லக்னோ வரலாற்றில் தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இந்த போட்டியில் களமிறங்கிய இரு அணி பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன்களை குவித்து ரசிகர்களை ரன் மழையில் நனைத்தார்கள் என்றே கூறலாம். மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 210/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 211 என்ற இலக்கை தூரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் குவின்டன் டி காக் அதிரடியாக 67 ரன்கள் குவிக்க கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லேவிஸ் வெறும் 23 பந்துகளில் அதிரடியாக 55* ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் செய்து தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

- Advertisement -

அனல் பறந்த போட்டி:
முன்னதாக இந்த போட்டியில் 211 என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி ஆரம்பம் முதலே ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது 10 ரன்களுக்கு மேல் விளாசி வந்தது. இடையில் மனிஷ் பாண்டேவை 5 ரன்களிலும் தீபக் ஹூடாவை 13 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் செய்த சென்னை வெற்றியை தன் பக்கம் இழுத்ததால் திடீரென போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் லக்னோ வெற்றிபெற 34 ரன்கள் தேவைப்பட்ட போது 19-வது ஓவரை வீசிய சிவம் துபேவை கதற கதற அடித்த லக்னோ வீரர்கள் 25 ரன்கள் குவித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்கள். இறுதியில் 19.3 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றபோது பெவிலியனில் அமர்ந்திருந்த கேப்டன் கேஎல் ராகுல் உட்பட லக்னோ அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் பயிற்சியாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வெற்றியை கொண்டாடினார்கள்.

கெளதம் கம்பீர் கண்ணில் வெறி:
அதே வெற்றியை லக்னோ அணிக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் மற்றவர்களை காட்டிலும் கடும் ஆக்ரோஷத்துடன் வெறித்தனமாக துள்ளி குதித்தெழுந்து கொண்டாடினார். ஏனெனில் முதலில் தங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அடி வாங்கி ரன்களை வாரி வழங்கிய நிலையில் அதற்கு ஈடாக சென்னையை புரட்டி எடுத்த லக்னோ அணி போராடி வரலாற்றின் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை ருசித்து வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

- Advertisement -

அப்படிப்பட்ட இந்த தரமான வெற்றியை கொண்டாடிய கௌதம் கம்பீர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காரணம் அவரது கண்ணில் அவ்வளவு வெறியும் அவரது முகத்தில் சென்னை அணியை தோற்கடித்த ஆக்ரோஷமும் காணப்பட்டது. இந்த புகைப்படங்களை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் தோனி டீமை மண்ணைக் கவ்வ செய்த வெறிதான் கௌதம் கம்பீர் கண்ணில் வெறியாக தெரிகிறது என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் தோனியை பற்றி நிறைய விமர்சனம் செய்திருந்த அவர் நிறைய எதிரான கருத்துக்களை தெரிவித்ததை எந்த ரசிகர்களும் மறக்கவில்லை.

குறிப்பாக 2011-ஆம் ஆண்டு இந்தியா வென்ற உலக கோப்பை இறுதி போட்டியில் 97 ரன்கள் விளாசிய தனது பெயரை விட 91* ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற தோனியின் பெயர் தான் அந்த உலகக் கோப்பையை பேசும்போதெல்லாம் முதல் பெயராக வந்து பாராட்டை பெறுகிறது. அத்துடன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வந்த அவர் எப்போதும் சென்னைக்கு எதிராக வரலாற்றில் ஆக்ரோஷமாக செயல்பட்டதையும் ரசிகர்கள் மறக்கவில்லை.

- Advertisement -

ட்விஸ்ட் வைத்த கம்பீர்:
இதனால் தோனியை கம்பீருக்கு பிடிக்காது என்ற பரவலான கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் காணப்படுகிறது. அதன் காரணமாக தான் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்த வெற்றியை கௌதம் கம்பீர் அந்த அளவுக்கு வெறித்தனமாக கொண்டாடினார் என சமூக பேசிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இறுதியாக கௌதம் கம்பீர் ஒரு ட்விஸ்ட் வைத்தார் என்றே கூறலாம். ஏனெனில் அந்தப் போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கைகொடுத்து உடைமாற்றும் அறைக்கு சென்றபோது தோனியிடம் கை கொடுத்த கௌதம் கம்பீர் அவரிடம் ஒரு சில நிமிடங்கள் மனம் விட்டுப் பேசினார்.

அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதிலும் அந்த தருணத்தில் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என யூகிக்கும் சில ரசிகர்கள் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் கௌதம் கம்பீர் தங்கள் கட்சியில் சேருமாறு தோனியிடம் அழைப்பு விடுத்தார் என்பது போன்ற நிறைய கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர். ஆனால் அந்த சந்திப்பை புகைப்படம் எடுத்த கௌதம் கம்பீர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “உங்களிடம் பேசியத தருணம் சிறப்பாக இருந்தது கேப்டன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : துவண்டு கிடக்கும் மும்பையை தூக்கி நிறுத்த வரும் முக்கிய வீரர்! அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தோனியின் தலைமையில் பல வருடங்களாக விளையாடிய கௌதம் கம்பீர் 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பையை இந்தியா வென்றதில் முக்கிய பங்காற்றினார். அப்போது தோனியை கேப்டன் என்று அழைத்து வந்த கௌதம் கம்பீர் இன்னும் அதை மறக்காமல் மீண்டும் கேப்டன் என அழைத்தது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Advertisement