துவண்டு கிடக்கும் மும்பையை தூக்கி நிறுத்த வரும் முக்கிய வீரர்! அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

MI
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் முதல் வாரத்திலேயே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முதல் போட்டியை தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

MI vs DC IPL 2022

- Advertisement -

இந்த தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 177 ரன்கள் குவித்தது.

மீண்டெழுமா மும்பை:
அதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ஆரம்பம் முதலே தங்களின் அபார பந்துவீச்சால் மும்பை கட்டுப்படுத்தியது. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் 72/5 என ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி தடுமாறியதால் மும்பையின் வெற்றி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல் மற்றும் இளம் வீரர் லலித் யாதவ் ஆகியோர் 75* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கையிலிருந்த மும்பையின் வெற்றியை பறித்து டெல்லிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

MI V DC IPL 2022

அதனால் முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்த மும்பை இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியது. அத்துடன் கடந்த 2013 முதல் இதுவரை கடந்த 10 வருடங்களாக அந்த அணி களமிறங்கிய தங்களின் முதல் லீக் போட்டியில் தொடர்ந்து 10 தோல்விகளை சந்தித்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்தது. இருப்பினும் அதே கால கட்டங்களில் 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாகவும் சாதனை படைத்துள்ளது. எனவே முதல் தோல்வியை பற்றி கவலைப்படாத அந்த அணி 2-வது போட்டியில் மீண்டெழுந்து முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

மீண்டு வரும் சூரியகுமார் யாதவ்:
முன்னதாக தங்களின் முதல் போட்டியில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விலகியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இசான் கிசான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது ரோகித் சர்மா அவுட்டான பின் அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் தவித்தனர். மறுபுறம் நல்லவேளையாக இசான் கிசான் மட்டும் நங்கூரமாக கடைசி வரை அவுட்டாகாமல் 81* ரன்கள் அடித்ததால் தப்பிய மும்பை இறுதியில் தோல்வி அடைந்தது.

SKY

இந்நிலையில் இந்த தொடரில் மும்பை தனது 2-வது லீக் போட்டியில் ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றி அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஜாஹீர் கான் பேசியது பின்வருமாறு.” சூர்யகுமார் யாதவ் எங்களால் தக்க வைக்கப்பட்ட வீரர் என்பதுடன் எங்கள் அணியின் முக்கியமான வீரர். எனவே அவர் களத்தில் விளையாடுவதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த வேளையில் அடுத்த போட்டியில் விளையாட அவர் தயாரா என்று கேட்டால், ஆம் தயாராக உள்ளார்” என கூறினார்.

- Advertisement -

தரமான சூரியகுமார்:
ஆரம்ப காலங்களில் கொல்கத்தா அணியில் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் கடந்த 2018 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். அதன்பின் ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 300 ரன்களுக்கு மேல் அடித்து வரும் அவர் அந்த அணிக்காக 3-வது இடத்தில் மட்டும் 1000 ரன்களுக்கும் மேல் விளாசியுள்ளார். மேலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப 3, 4, 5 என மிடில் ஆர்டர் வரிசையில் அனைத்து இடங்களிலும் விளையாடும் திறமையையும் அவர் பெற்றுள்ளார்.

Zaheer

சொல்லப்போனால் மும்பை அணிக்காக விளையாடிய பின்பு தான் இன்று இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். எனவே அவர் மும்பை அணியில் இணைவது அந்த அணிக்கு நிச்சயமாக ஒரு பலமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இது பற்றி ஜாஹீர் கான் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : தீபக் சாகர் திரும்பி வருவதில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனை – சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு

“அவரை போன்ற ஒருவர் இருந்தால் எந்த அணிக்கும் பயனாக இருக்கும். யுக்திகளின் அடிப்படையில் போட்டியின் எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்றவாரு விளையாக்கூடியவர்” என பாராட்டினார்.

Advertisement