தீபக் சாகர் திரும்பி வருவதில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனை – சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு

Chahar
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியால் 131 ரன்களை மட்டுமே குவிக்க கொல்கத்தா அணி அந்த போட்டியை எளிதில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்ததால் இரண்டாவது போட்டியில் இருந்து சி.எஸ்.கே சிறப்பாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

CSK

- Advertisement -

அதைப்போன்றே நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 210 ரன்கள் குவித்தது. ஆனாலும் இந்த 210 ரன்கள் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.3 ஓவர்களில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இப்படி சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு தோல்வியை சந்தித்ததால் தற்போது அந்த அணியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்படி சென்னை அணி அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்து வருவதற்கு முக்கிய காரணமாக தீபக் சாகர் அணியில் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

deepak

ஏனெனில் 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் சாஹர் ஏற்கனவே காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை தவறவிட்ட வேளையில் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது காயம் குணமடையாத காரணத்தினால் ஐபிஎல் தொடரின் முதலில் சில போட்டிகள் அவர் தவிர விடுவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி நடைபெற்று வரும் அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவர் வலைப்பயிற்சியில் பந்துவீசி வந்தாலும் இன்னும் அவரது காயம் குணமாகி சிஎஸ்கே அணியில் இணைய ஒரு மாதம் வரை ஆகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : இவங்க பிளேஆப் சுற்றுக்கு தகுதியாக வாய்ப்பே இல்ல. தொடரின் ஆரம்பத்திலேயே கணித்த – ஸ்ரீகாந்த்

இதன் காரணமாக அவர் சிஎஸ்கே அணியில் இணைவதற்கு இன்னும் கால தாமதம் ஆகும் என்ற புதிய பிரச்சினையை சி.எஸ்.கே அணி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement