இவங்க பிளேஆப் சுற்றுக்கு தகுதியாக வாய்ப்பே இல்ல. தொடரின் ஆரம்பத்திலேயே கணித்த – ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது முதல் வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் போட்டி போட்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் எந்த அணி பலமான அணி என்பதில் நமக்கு குழப்பம் ஏற்படும் வகையில் உள்ளது. ஏனெனில் பலம் வாய்ந்த ஒரு சில அணிகள் சிறிய அணியுடன் தோல்வியைத் தழுவுகிறது. அதே போன்று சிறிய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தி வருகிறது.

இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்தில் எந்த ஒரு அணியையும் நாம் பலமான அணி என்றே குறிப்பிட முடியாத அளவிற்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் தற்போது இந்திய அணி முன்னாள் அதிரடி தொடக்க வீரரும், தமிழக வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்த தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெறாது என்று ஒரு அணியை கை காட்டி உள்ளார். அந்த வகையில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு இடத்திலும் அவர்களது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பிய சன்ரைசர்ஸ் அணி அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அந்த அணி தற்போது பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் சன்ரைஸ் அணி பெற்ற இந்த தோல்வி குறித்து தமிழக வீரர் ஸ்ரீகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் :

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது ஒரு சிறப்பான போட்டி. அனைத்து வகையான துறையிலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவர்கள் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்கள். அதே வேளையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க : இப்போது புரிந்ததா! அவருக்கு அனுபவமே போதும், விமர்சனம் செய்யாதீங்க – தோனிக்கு கிடைத்த பெரிய ஆதரவு

மேலும் அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு ஒரு சாதகமான விடயமே இந்த போட்டியில் பார்க்கப்படவில்லை. இந்த தொடரின் துவக்கத்திலேயே இவர்கள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement