ரோஹித் சர்மா – விராட் கோலியை கெடுத்து விட்றாதீங்க.. ராகுல் டிராவிட் ஐடியாவுக்கு ரெய்னா எதிர்ப்பு

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர்.

அதனால் 2024 உலகக் கோப்பையில் அவர்கள் இருவரும் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த நிலைமையில் 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

- Advertisement -

டிராவிட்டின் ஐடியா:
எனவே ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் 2024 டி20 உலகக் கோப்பையில் துவக்க வீரர்களாக களமிறக்குவதற்கான திட்டத்தை வைத்திருப்பதாக ராகுல் டிராவிட் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக தெரிவித்தார். குறிப்பாக விராட் கோலி ஐபிஎல் தொடரில் இதற்கு முன் துவக்க வீரராக களமிறங்கி மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.

எனவே அவர்களை ஆரம்பத்திலேயே இறக்கி எதிரணிகளை அட்டாக் செய்யும் திட்டமும் தங்களிடம் இருப்பதாக டிராவிட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டம் சரியானதல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் விராட் கோலி 3வது இடத்தில் பேட்டிங் செய்வதையே விரும்புகிறேன்”

- Advertisement -

“ஏனெனில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கும் போது உங்களுக்கு இடது – வலது கை ஓப்பனிங் ஜோடி கிடைக்கும். இதற்கு முன் நாம் கம்பீர் – சேவாக் அல்லது சச்சின் – கங்குலி ஆகியோர் அந்த கலவையில் வெற்றிகரமாக விளையாடியதை பார்த்துள்ளோம். அத்துடன் இருவருமே அட்டாக் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள். மறுபுறம் விராட் கோலி 3வது இடத்தில் விளையாடினால் இந்திய பேட்டிங் திடமாக இருக்கும்”

இதையும் படிங்க: 1948 டூ 2024.. நிறைவுக்கு வந்த இந்திய அணியின் பெரிய துரதிஷ்டம்.. வியக்க வைக்கும் புள்ளிவிவரம் இதோ

“அவர் எப்போதும் ரன்கள் ஓடி ஸ்கோர்போர்டை நகர்த்திக் கொண்டே இருப்பார். எனவே அவர் தான் 3வது இடத்திற்கு சரியானவர் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் அணி நிர்வாகம் ஜெய்ஸ்வாலை 3வது இடத்தில் களமிறக்கலாம். இருப்பினும் இளம் வீரராக இருக்கும் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாடினால் அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பார்” என்று கூறினார்.

Advertisement