1948 டூ 2024.. நிறைவுக்கு வந்த இந்திய அணியின் பெரிய துரதிஷ்டம்.. வியக்க வைக்கும் புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முகமது நபி 42, ஓமர்சாய் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் 159 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு சிவம் துபே 60*, ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் அடித்து 17.3 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

திரும்பிய அதிர்ஷ்டம்:
முன்னதாக இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் டாஸ் வீசுவதில் சந்தித்து வந்த தோல்விகளை ஒரு வழியாக இந்தியா நிறுத்தியுள்ளது. அதாவது கடந்த 2023 நவம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கடைசியாக இந்தியா டாஸ் வென்றிருந்தது.

அதன் பின் திருவனந்தபுரம், கௌகாத்தி, ராய்ப்பூர், பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 4 போட்டியில் இந்தியாவுக்கு டாஸ் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழையால் டாஸ் வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால் அதன் பின் அந்த சுற்றுப்பயணத்தில் நடந்த கடைசி 2 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து டாஸில் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் தொடர்ந்து டாஸ் வீசுவதில் இந்தியாவை துரத்தி வந்த துரதிஷ்டம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியுடன் நிறைவுக்கு வந்தது.

இதையும் படிங்க: தோனி எனக்கு குடுத்த முக்கிய அட்வைஸ் இதுதான்.. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பின்னர் – ரிங்கு சிங் பேட்டி

சொல்லப்போனால் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டின் வரலாற்றில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் இந்தியா டாஸில் தோல்வியை சந்தித்ததும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 1948 முதல் 2023 வரை பல்வேறு காலகட்டங்களில் இந்திய அதிகபட்சமாக 9 முறை மட்டுமே டாஸில் தோல்வியை சந்தித்திருந்ததே முந்தைய பரிதாப சாதனையாகும். அந்த பட்டியல்:
1. 11 முறை : நவம்பர் 2023 – ஜனவரி 2024*
2. 9 முறை : ஜனவரி 1948 – நவம்பர் 1951
3. 9 முறை : ஜூலை 2018 – செப்டம்பர் 2018
4. 9 முறை : மார்ச் 2021 – ஜூலை 2021
4. 9 முறை : நவம்பர் 2022 – ஜனவரி 2023

Advertisement