- Advertisement -
ஐ.பி.எல்

அவங்க 3 பேருக்கும் என்ன குறை? அவங்கள ஏன் டீம்ல எடுக்கல.. சி.எஸ்.கே அணி செய்த தவறை – சுட்டிக்காட்டிய ரெய்னா

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 தொடரில் இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணி 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய வேளையில் தோனியின் தலைமையில் சென்னை அணி மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சி.எஸ்.கே அணியின் சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் : சுரேஷ் ரெய்னா

ஆனால் அவரது தலைமையிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட இந்த சீசனின் சீசனில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இதன் காரணமாக இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை உறுதி செய்யும் முனைப்புடன் சிஎஸ்கே அணி விளையாட காத்திருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணி பெற்று வரும் இந்த தொடர் தோல்விகளுக்கு சரியான வீரர்களை தேர்வு செய்யாததும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காததுமே பெரிய காரணம் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் நிர்வாகம் தமிழக வீரர்களை ஆதரிக்காததும் சரிவுக்கு முக்கிய காரணம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முன்பெல்லாம் சிஎஸ்கே அணி இவ்வளவு பலவீனமாக இருந்து நான் பார்த்தது கிடையாது. தற்போது உள்ள வீரர்களில் யாருக்கும் இன்டென்ட் இல்லை. அடித்து ஆட வேண்டும் என்கிற நினைப்பு கூட யாரிடமும் இல்லை என்று நினைக்கிறேன். அதேபோன்று டி.என்.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்திருக்கலாம்.

- Advertisement -

குறிப்பாக சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான் போன்ற வீரர்கள் குஜராத் அணிக்காக அசத்தி வரும் வேளையில் அவர்களை சென்னை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. முன்பு சென்னை அணி வெற்றிகரமான அணியாக இருந்தபோது முரளி விஜய், லட்சுமிபதி பாலாஜி, பத்ரிநாத் போன்ற உள்ளூர் வீரர்கள் அணியில் இருந்தனர்.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனோடு சேர்த்து 6 வீரர்கள் இடம்பெற வாய்ப்பு – விவரம் இதோ

அதுபோன்ற வீரர்கள் தற்போது இல்லை எனவே தமிழக வீரர்களை அவர்கள் நம்பாததும் இந்த சரிவுக்கு ஒரு காரணம். தற்போது உள்ள வீரர்களில் எந்த வீரரும் இன்டன்ட் காண்பிக்காமல் அதிகளவு டாட் பால்களை விளையாடுவதாலே போட்டியை இழக்கிறது. இதனை எல்லாம் சிஎஸ்கே அணி திருத்திக்கொள்ள வேண்டும் என ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -