இந்திய அணியில் அந்த 2 பேருக்கு மாற்றுவீரர் யாரும் கிடையாது. புரிஞ்சிக்கோங்க – சுரேஷ் ரெய்னா வெளிப்படை

Raina
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் தகுதி பெற்றுள்ள இந்திய அணியானது வருகிற 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து தங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாதது பெரிய பின்னடைவாக அமைந்தது.

Bumrah 2

- Advertisement -

அதே நேரத்தில் அவர்களுக்கு பதிலாக ஜடேஜாவின் இடத்தில் அக்சர் படேலும், பும்ராவின் இடத்தில் முகமது ஷமியும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். இப்படி மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த தேர்வு குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்து சரியான முடிவு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

axar Patel Virat Kohli Mohammed Shami

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை பும்ரா பவர்பிளே ஓவர், டெத் ஓவர், மிடில் ஓவர் என அனைத்து கட்டத்திலும் அருமையாக பந்து வீசக்கூடியவர். அவரது சாமர்த்தியமும் வேகமும் ஆஸ்திரேலியா மைதானத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லாதது பின்னடைவு தான்.

- Advertisement -

அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள முகமது ஷமி அவருக்கு சரியான மாற்றுவீரர் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்களே கிடையாது. அவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க : இது வெறும் கிரிக்கெட் மேட்ச் இல்ல, இந்தியா – பாக் போட்டிக்கு ராக் தெறிக்கவிடும் ஆதரவு – வீடியோ இதோ

இருந்தாலும் தற்போதுள்ள ஆப்ஷன்களின் அடிப்படையில் ஷமி சிறப்பான ஒரு வீரர் தான். ஏற்கனவே அவர் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி உள்ளதாலும் அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதாலும் அவர் இடம் பெறலாம் என ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement