தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தபோது கண்ணீர் விட்டு அழுத சகவீரர் – சுவாரசிய தகவல்

Dhoni test
- Advertisement -

இந்தியாவின் ஜாம்பவான் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி ஒரு கேப்டனாக இந்தியாவிற்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து மகத்தான சாதனை படைத்தவர். அதிரடிக்கு பெயர் போன அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிகளை தேடித் தரும் பினிசர், மின்னல் வேகத்தில் செயல்படும் விக்கெட் கீப்பர், அடுத்தடுத்த வெற்றிகளுடன் அணியை வழிநடத்தும் தரமான கேப்டன் போன்ற பல பரிணாமங்களை கொண்டவர். அத்துடன் அப்போதைய தருணத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பையும் ஆதரவையும் அளித்து அவர்களை வருங்கால நட்சத்திரங்களாக உருவாக்கி இந்திய கிரிக்கெட்டின் வளமான எதிர்காலத்திற்கு வித்திட்டவர்.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

பொதுவாகவே மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக சிந்திக்கும் அவர் 2007 உலகக் கோப்பை பைனல் உட்பட பல தருணங்களில் வித்தியாசமாக சிந்தித்து எடுத்த தரமான முடிவுகள் இந்தியாவிற்கு பல சரித்திர வெற்றிகளை தேடிக் கொடுத்தது. 2007 டி20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த உலக கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த அவர் இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என்ற தனது பெயரை அழுத்தமாக பொறித்துள்ளார்.

டெஸ்ட்டுக்கு கு பை:
மேலும் கடந்த 2010, 2011 ஆகிய வருடங்களில் இந்திய டெஸ்ட் அணியையும் சிறப்பாக வழி நடத்திய அவர் தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்தது. அந்த அடுத்தடுத்த வெற்றிகளால் இந்திய அணியில் இருந்த வீரர்களும் ரசிகர்களும் அவரை தங்களது நிரந்தரமான கேப்டனாக மனதார நினைத்தார்கள். அப்படிப்பட்ட தருணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போட்டது.

MS Dhoni Suresh Raina

ஏனெனில் மேற்கூறியது போல அடுத்தடுத்த வெற்றிகளால் பல உலக கோப்பைகளை வென்று ஆஸ்திரேலியாவுக்கு நிகரான பெருமைகளை இந்தியாவிற்கு வாங்கிக் கொடுத்த அவர் திடீரென விலகியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இருப்பினும் தனது பணிச்சுமையை கருத்தில் கொண்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடும் வகையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து விட்டு நாடு திரும்பினார். அதன்பின் 2017-ஆம் ஆண்டு வெள்ளைப்பந்து கேப்டன் பொறுப்பையும் விராட் கோலியிடம் ஒப்படைத்த அவர் எந்தவித தயக்கமும் இன்றி அவர் தலைமை சாதாரண வீரராக விளையாடி கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையுடன் ஓய்வும் பெற்றார்.

- Advertisement -

ரெய்னா அழுதுவிட்டார்:
இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென எம்எஸ் தோனி ஓய்வு பெற்றபோது அவரின் நெருங்கிய நண்பராக கருதப்படும் சுரேஷ் ரெய்னா அழுது விட்டதாக முன்னணி இந்திய வீரர் அக்ஷர் பட்டேல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அந்த தருணத்தில் இருந்த அவர் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “மெல்போனில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 2-வது நாளிலேயே அவர் அந்த முடிவை அறிவித்துவிட்டார். அந்த தருணத்தில் மிகப்பெரிய அமைதி நிலவிய நிலையில் ரவிசாஸ்திரி அனைவரையும் கூப்பிட்டு ‘மஹி ஓய்வு பெறுகிறார்’ என கூறியபோது சுரேஷ் ரெய்னா அழத் தொடங்கிவிட்டார். அந்த சமயத்தில் நான் ‘என்ன நடக்கிறது ஏன் எல்லோரும் கண் கலங்குகின்றனர்’ என்பது போல் வியப்பில் ஆழ்ந்தேன்”

axar

“அந்த சமயத்தில் என்ன பேசுவது என்றே தெரியாமல் நின்றேன். ஏனெனில் நான் அப்போதுதான் முதல் முறையாக தோனியை பார்த்தேன். அப்போது அவரிடம் முதல் முறையாக பேசுவதற்கு முன்பாக அவர் என்னிடம் ‘அக்சர் நீ அணிக்குள் வந்து என்னை வெளியே செல்ல வைத்து விட்டாயா’ என ஜாலியாக கூறியபோது எனது கண்கள் கலங்கிவிட்டன. நான் அணியில் நுழைந்த போது அவர் வெளியேறினார். அதன் பின் வெறும் விளையாட்டாக அப்படி சொன்னேன் என்று கூறிய அவர் என்னை கட்டி அணைத்துக்கொண்டார்” என்று நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க : அவருக்கு மட்டும்தான் பெயர், புகழ்! தோனி மட்டும் ஒற்றை கையால் வாங்கினாரா? – 2011 உ.கோ பற்றி முன்னாள் வீரர்

பொதுவவே நிறைய இளம் வீரர்கள் எம்எஸ் தோனி தலைமையின் கீழ் விளையாட விரும்பும் நிலையில் தாமும் அவரின் கீழ் விளையாட மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்த அக்சர் பட்டேல் அது நிகழ்வதற்கு முன்பாகவே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்று வருத்தத்துடன் கூறினார். மேலும் அவரின் அந்த முடிவால் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்து கண் கலங்கி நின்றார்கள் என்றும் அக்சர் படேல் தெரிவித்தார்.

Advertisement