இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர்தான். இவர்தான் இந்த உலககோப்பையின் ஹீரோ – சுரேஷ் ரெய்னா கணிப்பு

Raina-and-Kohli
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் எந்தெந்த அணி கோப்பையை வெல்ல தகுதியான அணி? எந்த வீரர்கள் அதிக ரன்கள் குவிப்பார்கள்? எந்த பவுலர்கள் அதிக விக்கெட்டை எடுப்பார்கள்? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிப்பவர் மட்டுமின்றி இந்திய அணியின் அடுத்த விராத் கோலி சுப்மன் கில் தான் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் அவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவரே அடுத்த விராத் கோலி என்று நான் கருதுகிறேன். ஏனெனில் தற்போது அவர் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக உள்ளது.

அதோடு அவருடைய பேட்டிங் ஸ்டைல், கைகளை நகர்த்தும் வேகம் என அனைத்துமே மிகச் சிறப்பாக உள்ளது. ஸ்பின்னர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? வேகப்பந்து வீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? என்பதை அவர் தெளிவாக புரிந்து வைத்துள்ளார். அதோடு நிலையாக நின்று ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது பவுலர்களுக்கு தெரியாத விதம் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

2019-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்தார். அதேபோன்று இம்முறை சுப்மன் கில் இந்திய அணிக்காக உலக கோப்பை தொடரில் அதிகமாக ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன். மேலும் அவர் 50 ஓவர் வரை சென்று பேட்டிங் செய்யும் திறனுடையவர் அவ்வாறு அவர் விளையாடும்போது நிச்சயம் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும். என்னை பொருத்தவரை இந்திய அணியின் அடுத்த லீடராகவும் நான் கில்லை பார்க்கிறேன்.

இதையும் படிங்க : எல்லாரும் ரோஹித்தை தான் செலக்ட் பண்ணாங்க. ஆனா கோலியோட கேரியரை காப்பாத்துனதே தோனி தான் – சேவாக் தகவல்

இந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் விளையாடி வரும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் தடுமாறிய போது அவரே நல்ல ரன் குவிப்பிற்கும் அழைத்துச் சென்றிருந்தார். அவருடைய பார்ம் மற்றும் பேட்டிங் ஸ்டைல் ஆகியவற்றை பார்க்கும்போது நிச்சயம் அவர் ஒவ்வொரு போட்டியிலும் 50, 100 ரன்களை அடிக்கக்கூடிய வீரராகவே இருக்கிறார் என்று ரெய்ன தெரிவித்துள்ளார். இந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் 70 ரன்கள் சராசரியுடன் நான்கு சதம் மற்றும் நான்கு அரை சதங்களுடன் சுப்மன் கில் 1052 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement