சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். ருதுராஜ் கெய்க்வாட் இல்லை – சுரேஷ் ரெய்னா அதிரடி

Raina
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 16-ஆவது ஐபிஎல் தொடரானது வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக மினி ஏலமானது இன்று டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பங்கேற்கிறது.

CSK Ms DHoni

- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தோனியின் தலைமையில் மிக பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்துவரும் சி.எஸ்.கே அணியானது ஐபிஎல் தொடரின் இடையில் இரண்டு வருடம் தடை செய்யப்பட்டாலும் மீண்டும் வந்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தோனிக்கு அடுத்து சென்னை அணி கேப்டன் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.

ஏனெனில் கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை தலைமை தாங்கி அவரால் சிறப்பாக அணியை வழிநடத்த முடியவில்லை என்பதன் காரணமாக மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டோடு தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அடுத்ததாக சிஎஸ்கே அணியின் கேப்டனை தேர்வு செய்ய மும்முரமான வேலை நடைபெற்று வருகிறது.

sam curran

இந்நிலையில் அடுத்த சி.எஸ்.கே கேப்டன் குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சென்னை அணி தற்போது மிகச் சிறப்பான நிலையில் இருந்தாலும் அடுத்த கேப்டனை தேடுவது மிகவும் அவசியம். அந்த வகையில் சென்னை அணியில் நிச்சயம் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்து கேப்டனாக நியமிக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது அசத்தலாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்ற சாம் கரணை அணியில் தேர்வு செய்து அவரை கேப்டனாக ஆக்கலாம். ஏனெனில் தற்போது சென்னை அணிக்கு தேவை பின் வரிசையில் களமிறங்கி 7,8 ஆவது இடத்தில் பேட்டிங் செய்யவும் பந்து வீசவும் சிறப்பான ஒரு வீரர் தேவை. அந்த வகையில் சாம் கரன் அதை ஏற்கனவே சென்னை அணிக்காக செய்துள்ளதால் நிச்சயம் இம்முறை 16 கோடி வரை அவர் ஏலத்தில் செல்வார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : மோசமாக செயல்பட்டும் எதற்கென்றே தெரியாமல் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

எனவே சென்னை அணி ஏலத்தில் சாம் கரனை எடுத்தால் நிச்சயம் இந்த ஆண்டு அவரை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி வருங்கால சென்னை அணியின் கேப்டனாகவும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பலர் சென்னை அணியின் கேப்டனாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திகழ்வார் என்று கூறிய வேளையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான சாம் கரணை சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா கூறியது தற்போது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement