தோனியின் குணங்கள் அப்படியே இவரிடம் இருக்கு. எங்கயோ போக போறாரு – சுரேஷ் ரெய்னா பாராட்டு

Raina
- Advertisement -

சென்னை அணியின் கேப்டனாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடப்பு சீசன் வரை மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை அணியானது தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரையும் சேர்த்து நான்கு முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்து சென்னை அணியை வழிநடத்த போவது யார் ? என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயரை தோனி சம்பாதித்து வைத்துள்ளார்.

Dhoni-3

- Advertisement -

தற்போது 40 வயதை தொட்டுள்ள தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகளே விளையாடுவார் என்பதனால் சென்னை அணிக்கான அடுத்த கேப்டன் யார் ? என்ற விவாதங்கள் அதிக அளவு உள்ளன. இந்நிலையில் சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களில் ஒருவர் தோனியின் குணாதிசயங்களை அப்படியே வைத்திருக்கிறார் என்று அந்த இளம் வீரரை தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நமது அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் குணாதிசயங்கள் அனைத்தும் தோனியுடன் அப்படியே ஒத்துப்போகின்றன. நம் நாட்டுக்காக விளையாட ருதுராஜ் தற்போது தயாராகி விட்டார். நெருக்கடியான சூழலில் அவரது அபாரமான ஆட்டத்திறன் வெளிப்பட்டுள்ளதே அதற்கு சான்று. மேலும் லீக் போட்டிகளில் இருந்து தொடர்ந்து பிளே ஆப் வரை ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ruturaj

கிட்டத்தட்ட தோனியை போன்ற அதே குணாதிசயத்தை கொண்டவர் அவர். எப்போதும் மிகவும் அமைதியாக இருக்கிறார். தனது இலக்கை அடைவதில் கவனமாக இருக்கிறார். மேலும் அதற்காக கடுமையாக உழைக்க கூடியவர் என்பதால் தோனியின் அனைத்து குணங்களையும் நான் அவரிடம் பார்க்கிறேன் என ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 14வது ஐபிஎல் சீசன் முழுவதுமே சென்னை அணியின் துவக்க வீரர்களான டு பிளிசிஸ் மற்றும் ருதுராஜ் அமைத்த பாட்னர்ஷிப்பே வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இல்லனா இவரே சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் – ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு

நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ருதுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் மொத்தம் 635 ரன்கள் அடித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement