தோனி இல்லனா இவரே சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் – ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு

CSK
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13-வது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக சிஎஸ்கே அணி வெளியேறியது. அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி இனி வேலைக்கு ஆகாது என்றும் டேடிஸ் ஆர்மி என்றும் விமர்சிக்கப்பட்ட சிஎஸ்கே அணியானது மீண்டும் பலமாக திரும்பி வரும் என்று கடந்த ஆண்டில் சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். அதேபோன்று இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளே ஆகும் வாய்ப்பை உறுதி செய்தது.

deepak 1

- Advertisement -

அதுமட்டுமின்றி கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் அடுத்த ஆண்டு எந்தெந்த வீரர்கள் அணியில் தக்க வைக்கப் படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

அடுத்த ஆண்டு தோனி விளையாடினால் நிச்சயம் அவர்தான் முதல் வீரராக தக்க வைக்கப்படுவார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் அவரை தவிர்த்து தக்கவைக்கப்படும் மூன்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரை தான் தக்கவைக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தோனி அடுத்த ஆண்டு அணியில் விளையாடாமல் போனால் அடுத்து யார் கேப்டன் ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Jadeja

அதன்படி சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பல ஆண்டு காலமாக விளையாடி வரும் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜாவே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் அசத்தும் அவர் தோனியுடன் அதிக ஆண்டு காலம் நெருக்கமாக பழகியவர் என்பதால் நிச்சயம் அவருக்கு அணியை வழிநடத்தும் திறனும் இருக்கும் என்கிற காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் ஜடேஜாவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு சி.எஸ்.கே இவங்க 3 பேரை தக்கவச்சா நல்லா இருக்கும். தோனி வேணாம் – பொல்லாக் கருத்து

மேலும் அடுத்த கேப்டனாக சிஎஸ்கே அணியில் ஒருவர் இருந்தால் அது ரவிந்திர ஜடேஜா தான் இருப்பார் என்றும் ரசிகர்கள் இணையத்தில் ஜடேஜாவை ட்ரண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement