- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்.சி.பி அணிக்கு தான் கப்.. எழுதிவச்சிக்கோங்க.. அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா கருத்து

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை நெருங்கியுள்ளது. இன்னும் அந்த அணிக்கு மூன்று லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அந்தவகையில் இன்று மே 17-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அணி விளையாட இருக்கிறது.

ஆர்.சி.பி அணி தான் இம்முறை ஜெயிக்கும் : சுரேஷ் ரெய்னா

இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் உறுதி செய்துவிடும். மேலும் ஒரு வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் அந்த அணி இடம்பெறும். அப்படி தகுதி பெரும் பட்சத்தில் அந்த அணி இறுதிப் போட்டிக்கும் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆர்.சி.பி அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வித்தியாசமான முறையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே இந்த ஆண்டு அவர்களே ஐபிஎல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். ஏனெனில் வழக்கமாகவே பேட்டிங் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அந்த அணி தற்போது பந்துவீச்சிலும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் 150 மற்றும் 136 ரன்களை வைத்து அவர்கள் வென்றிருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு பவுலிங்கில் அதிக பலத்தை பெங்களூரு அணி கூட்டியுள்ளதால் இம்முறை அவர்கள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஃபினிஷர் டூ கேப்டன்.. வான்கடே எக்ஸ்ட்ராவாக ஜொலிக்கிறது.. ரோஹித்தை பாராட்டிய சூரியகுமார்

இதுவரை நடைபெற்றுள்ள 17 ஐபிஎல் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்லாத இந்த அணி இம்முறை விராட் கோலிக்காக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -