இந்திய அணிக்கு தற்போது நிச்சயம் அவர் தேவை. அப்போதான் சமாளிக்க முடியும் – சுரேஷ் ரெய்னா வெளிப்படை

Raina
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கடந்த ஓர் ஆண்டாகவே தொடர்ச்சியாக தாங்கள் பங்கேற்ற அனைத்து டி20 தொடர்களையும் கைப்பற்றி அசத்தி வருகிறது. அதோடு அடுத்ததாக தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை குறி வைத்துள்ளது. இந்திய அணி தற்போது மிகச் சரியான கலவையில் அனைத்து வீரர்களின் பங்களிப்பினாலும் சிறப்பாக விளையாடி வருவதால் இம்முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

Rohit Sharma IND vs SA

- Advertisement -

ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணி குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி தங்களது அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா : நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியின் நடு வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். ஏனெனில் தற்போது உள்ள இந்திய அணியில் டாப் ஆர்டரில் 6 பேட்ஸ்மேன்களுமே வலதுகை ஆட்டக்காரர்கள். ஆனால் நாம் விளையாடப் போகும் எதிரணியில் எப்படியும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அந்த வகையில் அவர்களுக்கு எதிராக மொத்தமும் வலது கை ஆட்டக்காரர்களைக் கொண்டு சமாளிப்பது என்பது சற்று சிரமமான விடயம் தான்.

Rishabh Pant 44

இந்திய அணியை பொருத்தவரை 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நாம் உலக கோப்பையை கைப்பற்றிய போது கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், நான் உட்பட சில இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தோம். அதேபோல இம்முறையும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் மிடில் ஆடரில் ரிஷப் பண்டின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். இடதுகை ஆட்டக்காரர்களால் பவுலர்களுக்கு எதிராக நிச்சயம் ஆதிக்கத்தை செலுத்த முடியும்.

- Advertisement -

நாங்கள் விளையாடிய போது நானும், யுவராஜ் சிங்கும் எதிரணியை எங்களது அதிரடியின் மூலம் பயமுறுத்துவோம். அந்த வகையில் தற்போது அதேபோன்று எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை பயமுறுத்தும் அளவிற்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் அதைச் செய்ய முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : 24 பாலையும் ஸ்லோவா போடறது ஒன்னும் தப்பு கிடையாது. அதுதான் என்னோட டேலன்ட் – இந்திய பவுலர் பேட்டி

அதே போன்று இடதுகை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு என்பது அவசியம் என்பதால் ரிஷப் பண்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்லவும் உதவி செய்துள்ளார் என்பதனால் ஆஸ்திரேலியா போன்ற பெரிய ஆடுகளங்களில் அவரது ஆட்டம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement