24 பாலையும் ஸ்லோவா போடறது ஒன்னும் தப்பு கிடையாது. அதுதான் என்னோட டேலன்ட் – இந்திய பவுலர் பேட்டி

INDIA Arshdeep Singh Harshal Patel
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது அடுத்ததாக தற்போது ஆஸ்திரேலியாவில் துவங்கியுள்ள டி20 தொடரை கைப்பற்றும் முனைப்போடு தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியானது அதன் பிறகு தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் டி20 உலக கோப்பையை வெல்லாததால் இம்முறை கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இம்முறை மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவதால் கோப்பையை வெல்லவும் அதிக வாய்ப்புள்ளதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

David Miller IND vs Sa.jpeg

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியில் தற்போது ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ஏனெனில் பும்ரா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் டெத் ஓவர்களில் இந்திய அணி ரன்களை அதிகளவில் கசியவிட்டு வருகிறது. இப்படி சற்றே பலவீனமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கிறது. இருந்தாலும் நிச்சயம் இந்த யூனிட்டை வைத்து வெற்றி பெற முடியும் என்று நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வரும் ஹர்ஷல் பட்டேல் தனது ஸ்லோவர் பந்துகள் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : மெதுவாக பந்து வீசுவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. அதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். ஏனெனில் காற்றில் பந்து வரும்போது தான் ஏமாற்று வேலை துவங்குகிறது. ஸ்லோவாக பந்து வீசுவது என்பது மிகக் கடினமான ஒரு யுக்தி நாம் அவ்வாறு பந்துகளை வீசும் போது பந்து கொஞ்சம் நின்று வந்தால் இன்னும் சிறப்பாக அந்த பந்து பேட்ஸ்மனை திணறடிக்கும்.

Harshal-Patel

காற்றில் நாம் பந்தை ரிலீஸ் செய்யும் போது அதில் பல வேறியேஷன்கள் உள்ளன. அப்படி பல்வேறு விதங்களில் நான் பந்தில் இருந்து வேகத்தை குறைத்து ஸ்லோவர் பந்துகளை வீசி வருகிறேன். இப்படி மெதுவாக பந்து வீசுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால் அதற்காகவே நான் என்னை தயார்படுத்தி பயிற்சியினை எடுத்துக்கொண்டு இவ்வாறு வீசி வருகிறேன்.

- Advertisement -

ஒரு டி20 போட்டியில் ஒரு பவுலருக்கு நான்கு ஓவர்கள் இருக்கிறது என்றால் 24 பந்துகளையும் ஸ்லோவர் பந்துகளாக வீசுவதில் தவறு ஒன்றும் இல்லையே. ஏனெனில் 24 பந்துகளையும் நான் பொறுமையாக வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டை கைப்பற்றினால் கூட அது அணிக்கு நல்லது. அதே வேளையில் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசி நான்கு ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தால் அது அணிக்கு பயனற்ற ஒன்று.

இதையும் படிங்க : NAM vs SL : ஆசியக்கோப்பை சாம்பியனான இலங்கை நமீபியாவிடம் தோற்க 3 காரணங்கள் – தப்பு கணக்கு போட்டுடாங்க

எனவே என்னுடைய திறனை வைத்து நான் நிச்சயம் இந்திய அணிக்காக எனது பங்களிப்பை வழங்குவேன். ஸ்லோவர் பந்து என்பது பெரிய பெரிய ஹிட்டர்களுக்கு எதிராக அருமையான பந்து. நிச்சயம் என்னுடைய இந்த திறனை வைத்து நான் விக்கெட்டுகளை பெற்று தருவேன் என ஹர்ஷல் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement