NAM vs SL : ஆசியக்கோப்பை சாம்பியனான இலங்கை நமீபியாவிடம் தோற்க 3 காரணங்கள் – தப்பு கணக்கு போட்டுடாங்க

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரானது இன்று கோலாகலமாக துவங்கியது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆசியக் கோப்பையை வென்ற சாம்பியன் அணியான இலங்கை அணியை எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வகையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது.

NAM vs SL

- Advertisement -

நமீபியா அணியிடம் ஆசிய கோப்பையை வென்ற சாம்பியன் அணியான இலங்கை அணி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில் நமீபியா கிரிக்கெட் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏனெனில் சிறிய அணியாக இருந்தாலும் ஒரு பலம் வாய்ந்த அணியை மிகச் சிறப்பாக வீழ்த்திய அவர்களது இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் விளையாடிய நமீபியா அணியானது 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது நமீபியா அணியின் பந்துவிச்சை எதிர்கொள்ள முடியாமல் முழுவதுமாக 20 ஓவர்களை கூட விளையாடாமல் 19 ஓவர்களிலேயே 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர். இப்படி இலங்கை அணி மோசமான படுதோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

JJ Smit

1) ஆடுகளத்தின் தன்மையை கணிக்காமை : போட்டி துவங்கிய சிறிது நேரத்திலேயே நமீபியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தாலும் 15 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடி பின்னர் கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஆடி நல்ல ரன் குவிப்பை வழங்கியது, ஆனால் இலங்கை அணி வீரர்கள் அதுபோன்று களத்தின் தன்மையை கணிக்காமல் துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியதால் விக்கெட்டுகளை இழந்தனர்.

- Advertisement -

2) அதிரடியாக விளையாடி எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தல் : நமீபியா 15 ஓவர்களுக்கு மேல் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அடித்தனர். ஆனால் இலங்கை அணி வீரர்கள் நமீபியா சிறிய அணி என்று தப்பு கணக்கு போட்டு எல்லா ஓவர்களிலும் பெரிய ஷாட்டுகளை விளையாட நினைத்து தொடர்ந்து விக்கெடுகளை இழந்தனர்.

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி இந்தியாவுக்கு விளையாடுவேன் – பேட்டிங்கில் அசத்தும் லடாக் சிறுமி, வாழ்த்திய மிதாலி

3) சிறிய அணி என்ற மெத்தனம் : இந்த போட்டியில் 15 ஓவர் வரை சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியானது இறுதியில் நமீபியா அணி எவ்வளவு ரன்கள் அடித்து விடப்போகிறது என்று கடைசி ஐந்து ஓவர்களை எளிதாக வீசிவிட்டனர். குறிப்பாக 15 ஓவர்கள் வரை 95 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நமீபியா மீதம் இருந்த கடைசி ஐந்து ஓவர்களில் 68 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி நமீபியா அணியை குறைத்து மதிப்பிட்டதே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement