விராட் கோலி மாதிரி இந்தியாவுக்கு விளையாடுவேன் – பேட்டிங்கில் அசத்தும் லடாக் சிறுமி, வாழ்த்திய மிதாலி

VIrat Kohli Fan
- Advertisement -

வங்கதேசத்தில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 7 அணிகள் பங்கேற்ற வந்த அத்தொடரில் லீக் சுற்றில் அசத்திய ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா நாக்-அவுட் சுற்றில் தாய்லாந்தை தோற்கடித்து அக்டோபர் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் பைனலில் இலங்கையை எதிர்கொண்டது. சைலட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கையை அனலாக பந்து வீசி வெறும் 65 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

கடந்த 2004 முதல் இதுவரை நடைபெற்றுள்ள 8 ஆசிய கோப்பைகளில் 7 கோப்பைகளை வென்ற இந்தியா ஆசிய மகளிர் கிரிக்கெட்டின் முடிசூடா அரசியாக மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து இந்திய ரசிகர்களை பெருமைப்படுத்தியது. ஆனாலும் இத்தனை வருடங்களாகியும் இதுவரை ஒரு மகளிர் ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் 2020 டி20 உலக கோப்பையில் பைனல் வரை சென்ற இந்தியா சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் கிரிக்கெட்டிலும் பைனல் வரை சென்று கோப்பையை கிட்டதட்ட நெருங்கியுள்ளது.

- Advertisement -

கோலியின் ரசிகை:
மேலும் ஆடவர் கிரிக்கெட் உலக அரங்கில் கொடிகட்டி பறக்க முக்கிய காரணமாக இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மகளிர் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளதால் விரைவில் மகளிரணி ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் என்னதான் இருந்தாலும் 90களில் ஆடவர் அணி ஒருசிலரை நம்பிக்கொண்டு தடுமாறியதைப் போல இப்போதும் இந்திய மகளிரணி மந்தனா, ஹர்மன்பிரீத் போன்ற ஒருசில வீராங்கனைகளை மட்டும் நம்பிக் கொண்டிருப்பதாலேயே பெரிய தொடர்களில் சாதிக்க முடியவில்லை.

அதனால் வருங்காலத்தில் விளையாடும் 11 வீராங்கனைகளும் மேட்ச் வின்னர்களாக இருந்தால் மட்டுமே இந்தியாவால் வெற்றிக்கனியை தொட முடியும் என்றே கூறலாம். அப்படி தேவைப்படும் நல்ல எதிர்காலத்துக்கு அடித்தளமாக இந்தியாவில் உருவாகி வரும் நிறைய இளம் வீராங்கனைகளுக்கு மத்தியில் கரடு முரடான மலை தொடர் நகரமான லடாக்கில் ஒரு சிறுமி இந்தியாவுக்காக விளையாடும் எண்ணத்துடன் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை வென்ற அதே நாளின் மாலையில் லடாக் நகர பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சக மாணவிகளுடன் விளையாடும் அந்த சிறுமி வலது கை பேட்டிங் வீராங்கனையாக அற்புதமாக அடிப்பதை பார்க்கும் போது அவரிடம் இயற்கையிலேயே நல்ல திறமை இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதை படம் பிடித்தவரும் “வாட் எ ஷாட்” என்று பாராட்டும் நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பிரபல ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க கற்று வருவதாக தெரிவிக்கும் அந்த சிறுமி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தமக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும் வருங்காலங்களில் நல்ல பயிற்சிகளை எடுத்து அவரை போல் உருவாக விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “குழந்தையிலிருந்தே நான் விளையாடி வருகிறேன். இப்போதும் நிறைய கற்று வரும் நான் குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட் எப்படி அடிப்பதென்று பயின்று வருகிறேன். இருப்பினும் 2வது ரன் எடுத்த பிறகு நாங்கள் சோர்வடைந்து விடுகிறோம். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார். அதனால் நான் அவரைப் போலவே உருவாக விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மக்சூமா எனும் பெயருடைய அந்த சிறுமியின் பயிற்சியையும் ஆர்வத்தையும் பார்க்கும் ரசிகர்கள் வரும் காலங்களில் அவரது ஆசைப்படி விராட் கோலி போல் வருவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். மேலும் இது போன்ற பெண்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகப் பெரிய ரோல் மாடலாக திகழும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அச்சிறுமியை ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு :

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் ரிசர்வ் வீரராக – தேர்வு செயயப்பட்டது ஏன்?

“அந்த சிறுமியின் அனைத்து கனவுகளுக்கும் சிறகுகள் வரும் என்று நம்புகிறேன். அவருடைய சில ஷாட்டுகள் சூப்பராக இருக்கிறது. அவரைப்போன்ற திறமையான சின்னக் குழந்தைகள் நமது நாட்டில் ஏராளமாக நிறைந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement