- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்கள மட்டும் இந்தியா தோக்கடிச்சிட்டா வேர்ல்டுகப் நமக்குத்தான் – சுரேஷ் ரெய்னா வெளிப்படை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் இன்னும் சில தினங்களில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் துவங்க உள்ளன. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நடைபெறும் மத்தியிலும் இருக்கும். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா பாகிஸ்தான் போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்தும், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணி தங்களது முதல் போட்டியிலேயே பலமான பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் சவாலான ஒரு விடயம் தான். ஆனாலும் இந்த போட்டியில் கடும் நெருக்கடிக்கு இடையே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் அணியின் நம்பிக்கை அதிகரிக்கும். அந்த வெற்றி இந்த தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அஸ்திவாரத்தையும் அமைக்கும்.

- Advertisement -

அதேபோன்று இந்த போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்காமல் தங்களது இயல்பான ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்பதே எனது கருத்து. ஏற்கனவே முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி பயிற்சி செய்தது பிசிசிஐ எடுத்த ஒரு நல்ல முடிவு. ஏனெனில் இந்திய அணிக்கு இந்த சில நாட்கள் பயிற்சியானது அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு வீரர்களை பழக்கி இருக்கும்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் படைக்கப்படுள்ள 5 மோசமான சாதனைகள் – வித்யாசமான பட்டியல்

அந்த வகையில் பாகிஸ்தான் அணியை மட்டும் நாம் வீழ்த்தி விட்டால் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை கூட வெல்ல வாய்ப்பு உள்ளது என்ற சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by