டி20 உலக கோப்பை வரலாற்றில் படைக்கப்படுள்ள 5 மோசமான சாதனைகள் – வித்யாசமான பட்டியல்

Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் நவம்பர் 13 முதல் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. பொதுவாகவே டி20 கிரிக்கெட் என்றாலே அதிரடி சரவெடியான பவுண்டரிகளுக்கும் ரசிகர்கள் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த வருடம் கூட முதலிரண்டு நாட்களிலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தது. அதேபோல் இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் பிறந்த அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளினார். அப்படி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட டி20 உலக கோப்பையில் அவ்வப்போது சில மோசமான சாதனைகள் படைக்கப் படுவது வழக்கமாகும்.

மேலும் கிரிக்கெட்டில் ஒரு அணி பிரம்மாண்ட வெற்றி பெறும் போது எதிரணி தோற்க வேண்டியது எழுதப்பட்ட விதியாகும். அந்த சமயத்தில் வெற்றி பெற்ற அணி அபார சாதனை படைக்கும் நிலையில் தோல்வியை சந்திக்கும் எதிரணி அந்த நாளே மறக்க வேண்டிய மோசமான சாதனையை படைக்கும். அதே போல சில வீரர்களும் மறக்க வேண்டியதாக இருந்தாலும் காலத்திற்கும் மறக்க முடியாத மோசமான சாதனை படைப்பார்கள். அந்த வகையில் 20 உலகக் கோப்பை வரலாற்றில் படைக்கப்பட்டுள்ள சில மோசமான சாதனைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. பரிதாப நெதர்லாந்து: கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒரு உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பந்து வீசிய இலங்கையின் லசித் மலிங்கா, அஞ்சலோ மேத்யூஸ், அஜந்தா மெண்டீஸ், நுவான் குலசேகரா ஆகிய பந்து வீச்சாளர்கள் இணைந்து கத்துக்குட்டி நெதர்லாந்தை நெருப்பாக பந்து வீசி மிரட்டினார்கள்.

அற்கு தாக்குப்பிடிக்க முடியாத நெதர்லாந்து வெறும் 10.3 ஓவரில் 39 ரன்களுக்கு சுருண்டு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான உலக சாதனை படைத்தது. அதே சமயம் 90 பந்துகளை மீதம் வைத்து அந்த இலக்கை சேசிங் செய்த இலங்கை டி20 உலக கோப்பையில் அதிக பந்துகளை மீதம் வைத்து பெரிய வெற்றியை பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

4. இலங்கையின் மிரட்டல்: கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையின் லீக் சுற்றில் கென்யாவை சரமாரியாக அடித்து துவைத்து பந்தாடிய இலங்கை 260 ரன்களைக் குவித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அணியாக சாதனை படைத்தது.

அத்துடன் பந்து வீச்சில் தீயாக செயல்பட்ட இலங்கை கென்யாவை வெறும் 88 ரன்களுக்குள் சுருட்டி 172 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக 2வது உலக சாதனையை ஒரே போட்டியில் படைத்தது.

- Advertisement -

3. மோசமான ஸ்ட்ரைக் ரேட்: பொதுவாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்டிரைக் ரேட் தான் வெற்றியின் ரகசியம் என்பார்கள். ஆனால் 2014இல் நடைபெற்ற உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஷாஃபூர் ஜாட்ரான் 11 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன்னை 9.09 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார். அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்டிரைக் ரேட்டை (குறைந்தது 10 பந்துகள்) கொண்ட வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்தார்.

4. டக் நாயகர்கள்: பொதுவாக டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டாவது ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனை பொருத்த வரை அவமானமாகும். அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி மற்றும் இலங்கையின் நட்சத்திர முன்னாள் தொடக்க வீரர் திலகரத்னே தில்சான் ஆகியோர் தலா 5 முறை டக் அவுட்டாகி டி20 உலக கோப்பையில் அதிகமுறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

1. பலி கிடா ப்ராட்: கடந்த 2007இல் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் டர்பன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வேண்டுமென்றே ஆண்ட்ரூ ஃபிளின்டாப் ஸ்லெட்ஜிங் செய்தார். ஆனால் அதற்கு பலி கிடாவாக சிக்கிய ஸ்டூவர்ட் ப்ராடை 19வது ஓவரில் வெச்சு செய்த இந்தியாவின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் நாலாபுறமும் 6 சிக்சர்களை பறக்க விட்டார்.

அதனால் டி20 உலக கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தது போலவே ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்த பவுலர் என்ற மோசமான உலக சாதனையை ஸ்டுவர்ட் ப்ராட் படைத்தார்.

Advertisement