தோனி ஓய்வு பெற்ற நாளிலேயே விடை பெற்றது ஏன்? உணர்ச்சிகரமான பின்னணியை பகிர்ந்த சுரேஷ் ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் 2010ஆம் ஆண்டு இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்திய பெருமையை கொண்டவர். அதே போல் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இன்றைய இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி முதல் பாண்டியா வரை 70% மேற்பட்ட வீரர்களை அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்து வளமான வருங்காலத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். அவர் வளர்த்த பல தரமான வீரர்களில் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர் என்று சொல்லலாம்.

Suresh Raina MS Dhoni

- Advertisement -

என்ன தான் 2005ஆம் ஆண்டு அறிமுகமானாலும் தோனி கேப்டனாக பொறுப்பேற்று 2007க்கு பின்பு தான் சுரேஷ் ரெய்னா அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்புகளையும் பெற்று ஜொலிக்கத் துவங்கினார். குறிப்பாக 2010 வாக்கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த ரெய்னா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நாக் அவுட் போட்டிகளில் எடுத்த கணிசமான ரன்கள் தான் 2011 உலக கோப்பையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பாராட்டும் அளவுக்கு கடுகு சிறுத்தாலும் காரம் பெரியது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

நட்பின் இலக்கணமாக:
மேலும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெல்வதற்கும் முக்கிய பங்காற்றிய அவர் இந்தியாவின் மிகச் சிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடியிருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தின் மாலை சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவில் தோனி ஓய்வு முடிவை அறிவித்த அடுத்த அரை மணி நேரத்தில் தாமும் ஓய்வு பெறுவதாக 33 வயதிலேயே அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாக்கினார்.

MS Dhoni Suresh Raina

மேலும் தோனி தான் 37 வயதானதால் ஓய்வு பெற்று விட்டார் என்றால் இவர் ஏன் 33 வயதிலேயே ஓய்வு பெற்றார் என்பதே பலரது ஆச்சரியமாகவும் இருந்தது. இந்நிலையில் 2005 முதல் 2018 வரை 10 வருடங்களுக்கு மேலாக இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் தோனியுடனும் அவரது தலைமையிலும் விளையாடிய தம்மால் அவர் இல்லாமல் விளையாட முடியாது என்ற காரணத்தாலேயே அவர் ஓய்வு பெற்ற அடுத்த அரை மணி நேரத்தில் ஓய்வு பெற்றதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் இருவரும் இணைந்து ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளோம். குறிப்பாக நான் அவருடன் இந்தியா மற்றும் சென்னை அணிக்காக இணைந்து விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருந்தேன். அதனால் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை வைத்துள்ளோம். நான் காசியாபாத்திலிருந்து வந்தேன் தோனி ராஞ்சியில் இருந்து வந்தார். நான் எம்எஸ் தோனிக்காக விளையாடினேன் பின்னர் நாட்டுக்காக விளையாடினேன். அது எங்கள் இருவருக்கும் இடையே நல்ல இணைப்பை ஏற்படுத்தியது. நாங்கள் இருவரும் இணைந்து நிறைய பைனல்களில் விளையாடியுள்ளோம். உலக கோப்பையும் வென்றுள்ளோம். அவர் மிகச்சிறந்த தலைவர் என்பதுடன் நல்ல மனம் கொண்டவர்” என்று கூறினார்.

Raina

அதாவது ஆரம்பம் முதலே இணைந்து விளையாடியதால் முதலில் தோனிக்காக விளையாடியதாகவும் பின்னர் நாட்டுக்காக விளையாடியதாகவும் தெரிவிக்கும் ரெய்னா தோனி தம்முடைய ஆருயிர் நண்பர் என்பதால் அவர் ஓய்வு பெற்ற நாளிலேயே தாமும் ஓய்வு பெற்றதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த நட்புக்கு இலக்கணமாக தோனி – ரெய்னா ஆகியோர் திகழ்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: வீடியோ : முதல் பந்தையே சேவாக் வீசியது ஏன்? வீசாத கடைசி 2 பவுலர் யார் – 2007இல் தோனி முடிவின் பின்னணியை பகிர்ந்த ஆர்பி சிங்

இருப்பினும் ஐபிஎல் தொடரில் 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரெய்னா 2021இல் கழற்றி விடப்பட்ட போது தோனி நினைத்திருந்தால் சென்னை அணியில் தக்க வைத்திருக்கலாமே என்பதே நிறைய ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

Advertisement