வீடியோ : முதல் பந்தையே சேவாக் வீசியது ஏன்? வீசாத கடைசி 2 பவுலர் யார் – 2007இல் தோனி முடிவின் பின்னணியை பகிர்ந்த ஆர்பி சிங்

MS Dhoni Sehwag RP Singh
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஓவர், 50 ஓவர், சாம்பியன்ஸ் ட்ராபி என 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே மகத்தான கேப்டனாக சாதனை படைத்தவர். இத்தனைக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது அதுவரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்து அனுபவமில்லாத போதிலும் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களை அபாரமாக வழி நடத்திய அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

அந்த உலக கோப்பையில் அனுபவம் மிக்க கேப்டன்கள் கூட எடுக்கத் தயங்கும் சில வித்தியாசமான முடிவுகளை தைரியமாக எடுத்த தோனியின் முடிவுகள் இன்றும் பலரிடம் வியப்பை ஏற்படுத்தி பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியே டையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வரலாற்றில் முதல் முறையாக பவுல் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. அதில் 5இல் முதல் 3 வாய்ப்புகளிலேயே இந்திய வீரர்கள் ஸ்டம்ப்பை கச்சிதமாக அடித்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் 3இல் ஒன்று கூட அடிக்காத காரணத்தால் இந்தியா வித்தியாசமான வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.

- Advertisement -

சேவாக் வீசியது ஏன்:
அதை விட அந்த தருணத்தில் பவுலர்கள் ஸ்டம்ப்பை சரியாக அடிப்பதற்காக ஸ்டம்ப்களுக்கு பின்னால் தோனி சாதூரியமாக மண்டியிட்டு அமர்ந்ததை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் செய்யத் தவறியது இரு அணிகளுக்கிடையான வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக ராபின் உத்தப்பா கடந்த வருடம் தெரிவித்திருந்தார். முன்னதாக அந்த தருணத்தில் ஹர்பஜன் சிங் போன்ற முதன்மை பவுலர்கள் இருந்த போது பகுதி நேர பவுலரான வீரேந்திர சேவாக் முதல் பந்தை வீசியதும் ஆச்சரியமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஏனெனில் முதல் கோணம் முற்றிலும் கோணமாகிவிடும் என்பது போல் ஒருவேளை முதல் பந்தை தவற விட்டால் அதன் காரணமாக இதர வீரர்களும் பதற்றமடைந்து ஸ்டம்ப்பை குறி பார்த்து அடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கலாம். இந்நிலையில் அந்த தருணத்தில் முதல் பந்தை வீரேந்திர சேவாக் வீசுவதற்கு தோனி முடிவெடுத்த காரணத்திற்கான பின்னணியையும் வெற்றி பெற்றதால் வீசப்படாத 4, 5 பந்துகளை இர்பான் பதான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஆகியோர் வீசுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த போட்டியில் விளையாடிய ஆர்பி சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தென் ஆப்ரிக்க டி20 தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக நாங்கள் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வலை பயிற்சிக்குப் பின்பும் லால் சந்த் ராஜ்புட் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் பந்தை ஸ்டம்ப்பில் அடித்து பயிற்சி எடுக்குமாறு அனைத்து இந்திய பவுவலர்களிடம் 6 பந்துகளை கொடுப்பார்கள். அத்துடன் தோனி மற்றும் லால் சந்த் ராஜ்புட் ஆகியோர் எந்த பவுலர் அதிக முறை ஸ்டம்ப்களை அடிக்கிறார்கள் என்பதையும் கண்காணித்து வைத்திருந்தனர்”

“அந்த பயிற்சிகளின் போது வீரேந்திர் சேவாக் மட்டுமே 100% ஸ்டம்ப்களை தொடர்ந்து அடித்து வந்தார். அதனால் தான் அப்போட்டியில் அவருக்கு தோனி முதல் பந்தை கொடுத்தார். அதில் அவரும் கச்சிதமாக செயல்பட்டதால் ஆரம்பத்திலேயே நாங்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினோம். அத்துடன் பவுல் அவுட் செய்யும் போது கடைசி 2 பந்துகளை வீசுவதற்கான வீரர்களையும் நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்தோம்”

இதையும் படிங்க: சீரிஸ் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள ஆஸ்திரேலியாவை அலற விட்டிங்களே அஷ்வின் – 2 முன்னாள் வீரர்கள் பாராட்டு

“ஆனால் வெற்றி பெற்று விட்டதால் அவர்கள் வீசவில்லை. அந்த வீரர்கள் யாரும் இல்லை இர்ஃபான் பாதான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆவார்கள். இருப்பினும் நான் அந்த பட்டியலில் இல்லை” என்று கூறினார். அப்படியானால் மற்றொரு பகுதி நேர பந்து வீச்சாளரான ராபின் உத்தப்பாகும் இதே அடிப்படையில் தான் அந்த சமயத்தில் பந்து வீச தேர்வு செய்யப்பட்டிருப்பார் என்பதும் தெரிய வருகிறது.

Advertisement